தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் திமுகவின் பாஜகவும் கூட்டணி கட்சிகள் தான். சண்டை போடுவது போல சண்டை போடுவது போல நடிக்கிறார்கள். அவற்றை நாம் நம்புவது போல நம்பி கொண்டிருக்கிறோம்.
ஒருவர் மாற்றி ஒருவர் சண்டை போட்டுக்கொண்டு அந்த சண்டையை முன்னிலைப்படுத்திவிட்டு இவர்கள் செய்யக்கூடிய நிர்வாக சீர்கேடுகள், அரசியல் அவலங்கள், மக்கள் பிரச்சனைகள், நாட்டில் உள்ள பிரச்சனைகள் இதையெல்லாம் மக்களிடமிருந்து எளிமையாக மறைத்துவிடுகிறார்கள் என்று சாடியிருந்தார்.
இதனை கண்டிக்கும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை யார் நடிக்கிறார்கள்.. நாங்கள் நடிக்கிறோமோ அல்லது விஜய் நடிக்கிறாரா..? நாங்கள் களத்தில் நின்று அரசியல் செய்து கொண்டிருக்கிறோம். விஜய் அவர்கள் படப்பிடிப்பில் நடிகையின் கிள்ளி கொண்டு வொர்க் ஃப்ரம் ஹோம் பாலிடிக்ஸ் செய்து கொண்டிருக்கிறார் என்று கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்திருந்தார்.
அதை தொடர்ந்து தமிழக வெற்றி கழக கட்சியினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் இருவருக்கும் இடையே இணைய பக்கங்களில் பனிப்போர் நிகழ்ந்து வருகிறது.
இதில் ஒரு பகுதியாக மூத்த பத்திரிக்கையாளர் திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். அவர் கூறியதாவது, அண்ணாமலை பேச்சை ஏற்றுக் கொள்ள முடியாது.
நடிகர் விஜய் இடுப்பு கிள்ளி என்றால்.. எம்ஜிஆரை என்ன என்று சொல்வீர்கள்..? ஜெயலலிதாவை என்னவென்று சொல்வீர்கள்..? நம்பியார் பற்றி என்ன சொல்வீர்கள்..? நம்பியார் திரையுலகில் ஆகச் சிறந்த வில்லன். அவரை போல வில்லனிசம் செய்பவர் தமிழ் சினிமாவில் இல்லை.
ஆனால், நம்பியார் நிஜத்தில் எவ்வளவு ஒழுக்கமானவர்.. பக்தியானவர்.. திருநீறு அணியாமல் பாழ் நெத்தியாக அவரை பார்க்க முடியாது.. குருசாமி.. அவரை போல ஒரு பக்திமான் ஒரு ஐயப்ப பக்தரை இங்கே காட்ட முடியாது.
சினிமா என்பது தொழில். ஒரு சாக்கடை சுத்தம் செய்பவர் அல்லது செருப்பு தைப்பவர் அரசியலுக்கு வருகிறார். அவர்கள் இழிவாக சொல்ல முடியுமா..? ஒருவருடைய தொழில் அதற்கு அவர்கள் வாங்கக்கூடிய சம்பளம் அவ்வளவுதான். அவர்களுடைய தொழிலை வைத்து அவர்களுடைய பொது வாழ்க்கையை பற்றி கேள்வி எழுப்புவதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.
அதே சமயம் 50 வயதில் அரசியலுக்கு வருகிறார் விஜய்.. 30 வயதில் என்ன செய்து கொண்டிருந்தார் என்று அண்ணாமலை கேள்வி எழுப்புகிறார். அந்த கருத்திலும் நான் முரண்படுகிறேன். அரசியலுக்கு எந்த வயசுலயும் வரலாம்.. அரசியலுக்கு வர இது தான் வயது என்ற எந்த வரைமுரையாவது இருக்க்ரியாதா..? 70 வயதிலும் அரசியலுக்கு வரலாம்.. 80 வயதிலும் அரசியலுக்கு வரலாம்..
அண்ணாமலையின் ஊர் கோயம்புத்தூர். கோயம்புத்தூரில் கல்லூரி படிப்பை முடித்த உடனே நீங்கள் அரசியலுக்கு வந்துவிட வேண்டியது தானே..? எதற்கு IIMல் படித்தீர்கள்..? எதற்கு ஐபிஎஸ் முடித்தீர்கள்..? என்று அண்ணாமலையை பார்த்து கேட்டால் சரியாக இருக்குமா..?
இந்த கேள்விகள் எல்லாம் சரி கிடையாது. இதனை தமிழக மக்கள் ரசிக்கவே மாட்டார்கள் என விட்டு விளாசி இருக்கிறார் பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே அவர்கள்