அட்லியை தொடர்ந்து மற்றொரு தென்னிந்திய இயக்குனருடன் ஷாருக்கான் கூட்டணி..! யாரு தெரியுமா..?

அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் ( Shah Rukh Khan  ) நடிப்பில் வெளியான "ஜவான்" திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து இந்திய திரையுலகில் புதிய சாதனை படைத்தது. 

சமீப காலமாக தென்னிந்திய திரைப்படங்கள், குறிப்பாக தெலுங்கு படங்கள் ஹிந்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் குவிப்பது தொடர்கதையாகி வருகிறது. இதன் காரணமாக, தென்னிந்திய இயக்குநர்களுக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. 

சமீபத்தில் வெளியான "அனிமல்" திரைப்படம் தொடங்கி "ஜவான்" வரை பல படங்களை தென்னிந்திய இயக்குநர்கள் இயக்கி பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர். 

உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் படுக்கையில் விஜயலட்சுமி..! உடன் இருக்கும் ஆண் யார்..? அதிர வைக்கும் வீடியோ..!

இந்நிலையில், "புஷ்பா 2" படத்தின் மூலம் இந்திய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள இயக்குநர் சுகுமார் அடுத்ததாக ஷாருக் கானுடன் கூட்டணி சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், இந்த கூட்டணி உறுதியானால் ஷாருக் கான் இந்த படத்தில் அதிக வில்லத்தனமான கதாபாத்திரத்தில், அதாவது ஒரு ஆன்டி-ஹீரோவாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தென்னிந்திய இயக்குநர்கள் பாலிவுட்டில் தொடர்ந்து வெற்றிகளை குவிப்பது இந்திய திரையுலகில் ஒரு புதிய போக்காக அமைந்துள்ளது. மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குநர்கள் ஏற்கனவே பாலிவுட்டில் முத்திரை பதித்திருந்தாலும், தற்போது அட்லீ, சந்தீப் ரெட்டி வங்கா, சுகுமார் போன்ற இயக்குநர்கள் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து வெற்றி பெறுவது தென்னிந்திய சினிமாவின் செல்வாக்கை உயர்த்தியுள்ளது. 

சுகுமார் இயக்கத்தில் ஷாருக் கான் இணைவது உறுதியானால், இது பாலிவுட்டில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஷாருக் கானை இதுவரை காணாத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் சுகுமார் காட்டுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

தென்னிந்திய இயக்குநர்களின் இந்த ஆதிக்கம் பாலிவுட்டில் மேலும் சில வருடங்களுக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post