Cloning கேங்ஸ்டர் இல்லப்பா.. ORIGINAL கேங்க்ஸ்டர்.. OG SAMBAVAM பாடலில் இதை கவனிச்சீங்களா..?


நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அட்லி திரைப்படத்தின் OG  சம்பவம் பாடல் வெளியாகி இருக்கிறது. 

இந்த பாடல் முழுதும் வெறித்தனமான பின்னணி இசை ஆக்ரோஷமான பாடல் வரிகள் என அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்திருக்கிறது. 

நீண்ட நாள் கழித்து ஒரு வெறித்தனமான அஜித் பாடலை கேட்கும் திருப்தி இந்த பாடலில் கிடைக்கிறது என ரசிகர்கள் பலரும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். 

அது மட்டும் இல்லாமல் நடிகர் விஜய் சீண்டும் விதமாக இரண்டு வருடங்களில் சில பாடலில் வரிகள் இடம் பெற்றிருக்கிறது அதில் ஒன்று "துப்பாக்கி பீரங்கி ரெண்டுமே வந்தாலும் ஒ***ல சம்பவம் டா.." என்ற பாடல் வரி அமைந்திருக்கிறது.

மேலும் கோட் படத்தில் சஞ்சீவ் என்ற கதாபாத்திரம் காந்தி என்ற கதாபாத்திரமான தன்னுடைய உண்மயான தந்தையின் கதாபாத்திரத்தை பழிவாங்க குளோனிங் முறையில் நிறைய விஜய்களை உருவாக்கி வைத்திருப்பார்.

அந்த சஞ்சய் கதாபாத்திரத்தை OG ஒரிஜினல் கேங்ஸ்டர் என்று படத்தில் அறிமுகப்படுத்துவார்கள். GOAT படத்தில் அடுத்த பார்ட் GOAT vs OG என்ற தலைப்பில் வெளியாகும் என்ற லீடையும் கொடுத்திருப்பார்கள். 

ஆனால், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து விட்டதால் அந்த படம் உருவாகுமா? உருவாகாது என்பது தேர்தலுக்கு பிறகு தான் தெரியும் என இயக்குனர் வெங்கட் பிரபு கூறி விட்டார். 

இந்நிலையில் Cloning கேங்ஸ்டர் இல்லப்பா.. நம்ம ஆளு ORIGINAL கேங்க்ஸ்டர்.. என்று சொல்லும் விதமாக ஒரிஜினல் கேங்ஸ்டர் A K என்ற பாடல் வரியையும் இணைத்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post