கிளாமர் தேவதை சில்க் ஸ்மிதா, தென்னிந்திய திரையுலகை தனது கவர்ச்சியால் கட்டி ஆண்டவர். 80-களில் ரசிகர்களின் கனவு கன்னியாகவும், திரையுலகின் தவிர்க்க முடியாத சக்தியாகவும் திகழ்ந்தவர் சில்க் ஸ்மிதா.
அவரது திடீர் மரணம் திரையுலகையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. சில்க் ஸ்மிதாவின் மரணம் தற்கொலை என கூறப்பட்டாலும், இன்று வரை அது பல மர்ம முடிச்சுகளைக் கொண்டதாகவே நீடிக்கிறது.
இந்நிலையில், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி வி.ஏ. ஜோதி, சில்க் ஸ்மிதாவின் மரணம் குறித்து வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல் ரசிகர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி வி.ஏ. ஜோதி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சில்க் ஸ்மிதாவின் மரணம் தொடர்பான சில அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "நடிகை சில்க் ஸ்மிதாவின் உடல் வைக்கப்பட்டு இருந்த பிணவறைக்கு நான்தான் இன்சார்ஜ். அந்த உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை திறந்து பார்த்தபோது நான் அதிர்ச்சி அடைந்தேன்.
சில்க் ஸ்மிதாவுடன் இன்னொரு வயதான நபரின் உடலும் இருந்தது. அந்த நபர் முகம் முழுக்க தாடியுடன், ஒரு கிழிந்த லுங்கி அணிந்து கொண்டு மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டார்." என்று வி.ஏ. ஜோதி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "சில்க் ஸ்மிதாவிற்கு மரியாதை கொடுக்கும் விதமாக, அந்த நபரின் உடலை மட்டும் எடுத்து வேறு பெட்டியில் நான் வைத்தேன்" என்றார். வி.ஏ. ஜோதியின் இந்த பகீர் தகவல் தற்போது ரசிகர்களை அதிர வைத்துள்ளது.
சில்க் ஸ்மிதா மரணத்தில் இதுவரை வெளிவராத பல மர்மங்கள் புதைந்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டாலும், அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருந்து வந்தன. அவரது மரணத்திற்கு காரணம் என்ன, யார் காரணம் என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது.
.jpg)
அந்த நேரத்துல மெதுவா.. இந்த நேரத்துல வேகமா.. உடலுறவு குறித்து கூச்சமின்றி கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி..!
இந்நிலையில் வி.ஏ. ஜோதியின் இந்த புதிய தகவல், சில்க் ஸ்மிதா மரணம் தொடர்பான மர்மங்களை மேலும் அதிகரித்துள்ளது. சில்க் ஸ்மிதாவுடன் பிணவறையில் இருந்த வயதான நபர் யார்? அவர் எப்படி சில்க் ஸ்மிதா உடலுடன் அங்கு வந்தார்? என்பன போன்ற கேள்விகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வி.ஏ. ஜோதியின் இந்த திடுக்கிடும் தகவல், சில்க் ஸ்மிதா மரணம் குறித்த மர்மங்களை மேலும் கிளறிவிட்டுள்ளதோடு, ரசிகர்களிடையே பல கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.
சில்க் ஸ்மிதா மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிவருமா? மர்மங்கள் விலகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.