நடிகர் ரவிக்குமார் மறைவு.. உடலை பார்த்து எம்.எஸ்.பாஸ்கர் சொன்ன வார்த்தை!

 தமிழ் சினிமாவையும் சின்னத்திரையையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது நடிகர் ரவிக்குமாரின் மறைவு. 

சன் டிவியில் ஒளிபரப்பான "சித்தி" சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ரவிக்குமார், கே. பாலசந்தர் இயக்கிய "அவர்கள்", "பகலில் ஓர் இரவு" மற்றும் ரஜினிகாந்தின் "சிவாஜி" படத்தில் அரசியல்வாதியாக நடித்து புகழ்பெற்றவர். 

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சென்னை வேளச்சேரியில் உள்ள பிரசாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், ஏப்ரல் 4, 2025 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அவரது மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரவிக்குமாரின் உடலுக்கு நடிகர் எம்.எஸ். பாஸ்கர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

"சின்ன பாப்பா பெரிய பாப்பா" சீரியலில் நடித்து பிரபலமான எம்.எஸ். பாஸ்கர், "இதுக்கு மேலயும் கஷ்டப்படாம போயிட்டீங்க அண்ணா" என உருக்கமாக பேசினார். 

ரவிக்குமார் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டதை அருகில் இருந்து பார்த்தவர் பாஸ்கர். அவரது பேச்சு ரசிகர்களை உலுக்கியது. 

கடந்த மார்ச் மாதம் மனோஜ் பாரதிராஜா, கராத்தே மாஸ்டர் ஹுசைனி, எஸ்.எஸ்.ஆரின் மனைவி தாமரைச்செல்வி என பலர் உயிரிழந்த நிலையில், ரவிக்குமாரின் மறைவும் திரையுலகை பேரிழப்பில் ஆழ்த்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post