“கள்ளக்காதல்” ஜான் ஜெபராஜ் மனைவி பற்றி பாதிரி சாமுவேல் - தீயாய் பரவும் வீடியோ!


கோவையைச் சேர்ந்த பிரபல பாப் பாடகரும் மதப் போதகருமான ஜான் ஜெபராஜ் மீது இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

2024 மே 21 அன்று அவரது இல்லத்தில் நடந்த பார்ட்டியில், 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது. 

தற்போது தலைமறைவாக உள்ள ஜான் ஜெபராஜ், முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், தனது மனைவியை தவறாக வழிநடத்தி, தன்மீது அவதூறு பரப்பப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். கோவை கிராஸ்கட் சாலையில் கிங் ஜெனரேஷன் பிரார்த்தனைக் கூடத்தை நடத்தி வந்த அவர், நடனம், குத்துப்பாட்டு உள்ளிட்ட வித்தியாசமான ஆராதனை நிகழ்ச்சிகளால் பிரபலமானவர். 

இதனால், சக மதப் போதகர்களின் விமர்சனத்திற்கு உள்ளானார். முன்னதாக, எட்வின் ரூசோவுடன் ஏற்பட்ட மோதலால் அவர் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார். சிறுமிகளை முத்தமிடுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவரைக் கைது செய்ய கோவை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தேடுதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சக பாதிரியார் சாமுவேல் என்பவர் ஜான் ஜெபராஜ் இந்த வழக்கில் எப்படி சிக்கினார் என்பது பற்றி தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார் அவர் கூறியிருப்பதாவது ஜான் ஜெபராஜ் இன்னொரு பெண்ணை தேடி செல்வதற்கு முதல் காரணம் அவருடைய மனைவிதான்/

நீ ஒழுங்காக இருந்தால் ஏன் ஜான் ஜெபராஜ் இன்னொரு பெண்ணை தேடி செல்ல போகிறான் என்ற கேள்வி வைத்த அவர் அதனை தொடர்ந்து அவர் மீது தொழில் ரீதியாக பொறாமை காரணமாகவும் போட்டி காரணமாகவும் அவரை முடக்க வேண்டும் என்று சக கிறிஸ்தவர்களே அவருக்கு எதிரான நடவடிக்கைகளை செய்கிறார்கள். 

அதன் ஒரு பகுதியாக தான் இப்படி சிறுமிகளை தூண்டிவிட்டு அவர் மீது பாலியல் புகார் கொடுக்க வைத்திருக்கிறார்கள் ஜான் ஜெபராஜ் குறித்து பொதுவெளியிலேயே மோசமான முறையில் அவரை விமர்சித்திருக்கிறார்கள் பாதிரியார்கள். இதற்கு என்ன காரணம், ஜான் ஜெபராஜ் நடத்தக்கூடிய கூட்டங்களுக்கு அதிகமான மக்கள் செல்கிறார்கள். நாம் நடத்தக்கூடிய கூட்டங்களுக்கு அதிகமான மக்கள் வருவதில்லை என்ற பொறாமை. 

நடனமாடி பாட்டுப்பாடி ஆண்டவனின் பெருமையை பரப்பக் கூடாது என்று பைபிளில் சொல்லப்பட்டுள்ளதாக முன்னணி பாதிரியார்கள் போர்வையில் வலம் வரக்கூடிய சிலர் கூறுகிறார்கள். அப்படியெல்லாம் கிடையாது. அவர்கள் பைபிளை படிக்கவில்லை என்று அர்த்தம். 

பைபிளில் தாவீது நடனமாடி இயேசுவை பிரார்த்தனை செய்தான் என்று வாக்கியம் இருக்கிறது. எப்படியோ ஒரு வழியில் தனக்கு தெரிந்த வழியில் ஆண்டவனின் பொறுமையை பரப்புகிற ஜான் ஜெபராஜ் மீது அவர்களுக்கு என்ன கோபம். 

என்னை கேட்டால் ஜான் ஜெபராஜ் கள்ளக்காதலில் விழுந்ததற்கு காரணம் அவருடைய மனைவி தான். அவர் கள்ளக்காதலில் இருப்பதாக சொல்லப்படும் பெண் வேறு யாரும் அல்ல அவருடைய உதவியாளரே தான். 

அதேபோல தொழில் போட்டி காரணமாக இவரை கீழே சாய்க்க வேண்டும் என்று சக கிறிஸ்தவர்களின் திட்டமிடல் தான் இவரை இந்த சிக்கலில் சிக்க வைத்திருக்கிறது. 

விரைவில் அவர் எந்த குற்றமும் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு வெளியே வருவார். அவர் மீது போக்சோ வழக்கம் கிடையாது.. கீக்சோ வழக்கும் கிடையாது என்று பேசியிருக்கிறார் பாதிரியார் சாமுவேல்.

Post a Comment

Previous Post Next Post