தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சுகன்யா. ஆனால், சினிமாவில் நடிப்பது அவரது ஆரம்ப கனவு அல்ல என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம்.
பரதநாட்டியத்தில் ஆழ்ந்த புலமை பெற்ற சுகன்யா, உலகம் முழுவதும் நடனத்தை பரப்ப வேண்டும் என்ற கனவை மட்டுமே மனதில் கொண்டிருந்தவர். இருப்பினும், விதியின் விளையாட்டால் அவர் சினிமாவில் நுழைந்து, ஒரு முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
சமீபத்தில் Kingwoods News யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், சுகன்யாவின் சினிமா பயணம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். சுகன்யா ஒரு பாரம்பரிய இசை குடும்பத்தில் பிறந்தவர்.
அவரது ஆரம்ப ஆசை, கலாச்சேத்ரா போன்ற உலகளாவிய இசைக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுவதும், பரதநாட்டியத்தை உலகம் முழுவதும் பரப்புவதுமாகவே இருந்தது. இதற்காக அவர் பல வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தனது நடனத்தை வெளிப்படுத்தினார்.
ஜெர்மன் நாட்டில் நடைபெற்ற கலாச்சார விழாக்கள், வெளிநாட்டு தூதரக நிகழ்வுகள் என பல முக்கிய மேடைகளில் சுகன்யாவின் பரதநாட்டியம் பாராட்டப்பட்டது. ஆனால், இதற்கிடையில் அவருக்கு சினிமாவில் நடிக்க பல வாய்ப்புகள் தொடர்ந்து வந்தன.
இருப்பினும், சினிமாவில் நடிப்பதில் விருப்பமில்லாத சுகன்யா, அவற்றை தவிர்த்து வந்தார். ஒரு முறை, வெளிநாட்டு நிகழ்ச்சியில் சுகன்யாவின் நடனத்தை பார்த்த இயக்குநர் கங்கை அமரன், அவரை தனது படத்தில் நாயகியாக நடிக்க வைக்க முயற்சித்தார்.
தூதரகம் அளிக்கும் தொகையை தானும் வழங்குவதாக உறுதியளித்தார். ஆனால், சுகன்யா, “எனக்கு விருப்பமில்லை, தொந்தரவு செய்யாதீர்கள்,” என்று மறுத்துவிட்டார். இதேபோல், கவிஞர் கண்ணதாசனின் மகனும் சுகன்யாவை தனது படத்தில் நடிக்க வைக்க முயன்று, அவரது பெற்றோரை சந்தித்து பேசினார்.
ஆனால், பெற்றோரும் மகளுக்கு சினிமாவில் ஆர்வமில்லை என்று தெரிவித்தனர். இப்படி பல வாய்ப்புகள் வந்து கொண்டிருந்த நிலையில், சுகன்யாவின் பெற்றோருக்கு ஒரு எண்ணம் தோன்றியது. “நமது மகள் சினிமாவில் நடித்தால் நன்றாக இருக்குமே,” என்று அவர்கள் யோசிக்கத் தொடங்கினர்.
இதையடுத்து, அவர்கள் சுகன்யாவின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு, தங்களது ஆஸ்தான ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டனர். ஜோதிடர், “சினிமாவே வேண்டாம் என்று உங்கள் மகள் சொன்னாலும், 10 வருட காலம் சினிமாவை தன்னுடைய கட்டுக்குள் வைத்திருப்பார்,” என்று கூறினார்.
இந்த கணிப்பு, சுகன்யாவின் பெற்றோருக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்தது. பின்னர், மற்றொரு தயாரிப்பாளர் சுகன்யாவை நடிக்க வைக்க அவரது பெற்றோரிடம் அனுமதி கேட்டார். அப்போது பெற்றோர், “பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து பேசுங்கள், அவர் மீதுள்ள மரியாதையால் சுகன்யா உங்கள் பேச்சை கேட்கலாம்,” என்று அறிவுறுத்தினர்.
இதையடுத்து, அந்த தயாரிப்பாளர் சுகன்யாவின் பள்ளிக்கு சென்று, தலைமை ஆசிரியரை சந்தித்தார். முன்னதாக அவர்கள் கல்லூரி நண்பர்களாக இருந்ததால், தயாரிப்பாளர் தனது விருப்பத்தை தெரிவித்தார். தலைமை ஆசிரியர், சுகன்யாவை அழைத்து, “உனக்கு விருப்பமிருந்தால் நடிக்கலாமே,” என்று கூறினார்.
ஆனால், சுகன்யா, “படிக்க சொல்வதற்கு பதிலாக நடிக்க சொல்கிறீர்களே சார்?” என்று கேட்டார். இருப்பினும், பலரது வற்புறுத்தலையும் மறுத்த சுகன்யா, தலைமை ஆசிரியரின் பேச்சை மதித்து, இறுதியில் நடிக்க சம்மதித்தார். சுகன்யாவுக்கு இவ்வளவு வாய்ப்புகள் வந்ததற்கு முக்கிய காரணம், அவரது முக பாவனைகள் என்று பத்திரிகையாளர் பாண்டியன் குறிப்பிடுகிறார். சத்யராஜ் சுகன்யா தொப்புளில் ஆம்லேட் போடுறார்.. விஜயகாந்த் பம்பரம் விட்டு விளையாடினார்.
பரதநாட்டியத்தில் பயிற்சி பெற்ற நடிகைகளுக்கு, முக பாவனைகளுக்கு ஏற்ப உடல் நளினமாக மாறும் திறன் இருக்கும்.
இந்த சூட்சுமம், முன்னணி நடிகை பத்மினிக்கு பிறகு சுகன்யாவிடம் மட்டுமே இருந்ததாக பாண்டியன் கூறுகிறார். இதுவே, சுகன்யாவை சினிமாவை நோக்கி இழுத்த முக்கிய காரணமாக அமைந்தது. சுகன்யாவின் சினிமா பயணம், அவரது விருப்பத்திற்கு மாறாக தொடங்கினாலும், அவர் பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக உயர்ந்தார்.
‘தை பொறந்தாச்சு’, ‘சின்ன கவுண்டர்’ போன்ற படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. சினிமாவை விரும்பாத ஒரு பரதநாட்டிய கலைஞர், எப்படி சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடித்தார் என்பது, சுகன்யாவின் திறமையையும், விதியின் விளையாட்டையும் எடுத்துக்காட்டுகிறது.