தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை கனிகா (எ) திவ்யா வெங்கடசுப்பிரமணியம்.
‘ஃபைவ் ஸ்டார்’ (2002) படத்தில் அறிமுகமான இவர், ‘வரலாறு’, ‘ஆட்டோகிராஃப்’, ‘பாக்யதேவதை’ உள்ளிட்ட படங்களில் தனது திறமையான நடிப்பால் கவனம் ஈர்த்தார்.
தற்போது திரைப்பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல் 2’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் கனிகா, முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் தனது நடிப்பால் ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
சமீபத்தில், கனிகா தனது குடும்பத்துடன் தாய்லாந்து பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் நீச்சல் குளத்தில் டூ-பீஸ் நீச்சல் உடையில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. “கனிகாவின் கவர்ச்சியான தோற்றம் வாய்பிளக்க வைக்கிறது,” “வயது ஏற ஏற அழகு கூடுது!” என ரசிகர்கள் புகழ்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரம், “இத்துனூண்டு உடை தேவையா?” என விமர்சிக்கும் கருத்துகளும் எழுந்துள்ளன. கனிகாவின் இந்த தைரியமான தோற்றம், அவரது நம்பிக்கையையும், ஆளுமையையும் வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.