கன்றாவி.. சகிக்கல.. இணையத்தில் காதல்.. லாட்ஜில் தெரிந்த அந்த உண்மை.. மிரண்டு போன போலீஸ்!


சென்னை ஆவடியின் அமைதியான வீதியில், தாத்தா-பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தாள் 14 வயது சிறுமி மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 

தந்தை குடும்பத்தை விட்டுப் பிரிந்து, தாய் வேலைக்குச் சென்ற நிலையில், மீனாவின் உலகம் தாத்தாவின் கதைகளும், பாட்டியின் கைப்பக்குவமும் மட்டுமே. 

ஆனால், அவளது இதயம் பாசத்திற்கு ஏங்கியது. இன்ஸ்டாகிராமில் தனது பொழுதுகளைப் போக்கிய மீனா, ஒரு நாள் பொள்ளாச்சியைச் சேர்ந்த 19 வயது சூர்யாவின் மெசேஜைப் பெற்றாள். 

அவனது இனிமையான பேச்சு, மீனாவை வசீகரித்தது. மெசேஜ்கள் வீடியோ அழைப்புகளாக மாறின. சூர்யா, மீனாவை ‘காதல்’ என்று நம்ப வைத்து, அரைகுறை ஆடைகளில் தோன்றச் செய்து, அவளது அப்பாவித்தனத்தைப் பயன்படுத்தினான். 

“நேரில் சந்திக்கணும், மீனா!” என்று அவன் ஆசை காட்ட, மீனாவின் மனம் பறந்தது. ஒரு இரவு, சூர்யா பொள்ளாச்சியிலிருந்து பைக்கிலேயே ஆவடிக்கு வந்தான் சூரியா. 

நாசுக்காக பேசி மீனாவை வீட்டுக்கு வெளியே அழைத்தவன், “வா, போகலாம்!” என்று கூறினான். பாட்டி தடுத்தபோது, மீனா பாட்டியை  தள்ளிவிட்டு, சூர்யாவுடன் பைக்கில் ஏற அடித்த சில வினாடிகளில் பைக் சிட்டாக பறந்தது. 

தம்பரத்தில் ஒரு தனியார் விடுதியில் அவர்கள் தங்கினர். சூர்யா, உஷாராக தனது எண்ணை மறைத்து, மீனாவின் எண்ணை விடுதி பதிவில் கொடுத்தான். ஆனால், மீனா தன்னுடைய எண்ணை கொடுக்காமல் தன்னுடைய தாத்தாவின் எண்ணை கொடுத்திருக்கிறாள். 

விடுதியிலிருந்து வந்த குறுந்தகவலைப் பார்த்து அதிர்ந்த தாத்தா, ஆவடி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை விரைந்து, மீனாவை மீட்டு, சூர்யாவை கைது செய்தது. 

“நாங்கள் காதலிக்கிறோம்!” என்று சூர்யா வாதிட்டாலும், “18 வயதுக்குட்பட்டவர்கள் குழந்தைகள்; இது கடத்தல்! நீங்க பண்றதுக்கு காதல் இல்ல கன்றாவி.. சகிக்கல.." என்று காவலர் பாடம் எடுத்து, POCSO சட்டத்தில் சிறையில் அடைத்தனர். 

ஆனால், கதை இங்கே முடியவில்லை. மீனா, ஏற்கனவே மணிகண்டன் என்ற இளைஞனுடன் இதேபோல் பழகி, அவனையும் இதே போல வழக்கில் சிக்க வைத்திருந்தாள். அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த கூத்து அரங்கேறியுள்ளது. 

தாத்தா-பாட்டியின் அரவணைப்பு மட்டுமே பெற்ற மீனாவுக்கு, குடும்ப பாசமும், உறவுகளின் மதிப்பும் தெரியவில்லை. இன்ஸ்டாகிராமில் தேடிய ‘துணை’, இரு இளைஞர்களின் வாழ்க்கையை அழித்தது. 

மீனாவின் கதை, பெற்றோரின் பொறுப்பை நினைவூட்டுகிறது. குழந்தைகளுக்கு பாசத்துடன், உறவுகளின் மதிப்பையும், சமூக ஊடகங்களின் ஆபத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும். 

இல்லையெனில், இளம் மனங்கள் தவறான பாதைகளில் பயணித்து, தங்களையும் மற்றவர்களையும் பாதிக்கும்.

--- Advertisement ---