பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கார் மூவிஸ் பாலாஜி பிரபு சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தி பிரிவு அதன் பிறகு ஏற்படும் சர்ச்சைகள் பற்றி பேசியிருக்கிறார்.
அவர் கூறியதாவது, இந்த விவகாரத்தில் எந்த குழப்பமும் இல்லாமல் எளிமையாக புரிந்து கொள்ளும்படி நான் கூறுகிறேன். ஜெயம் ரவி ஆர்தியை காதலித்து தான் திருமணம் செய்தார்.
சினிமாவில் அறிமுகமான நாள் முதல் அவருடைய விவாகரத்து அறிவிப்பு வெளியான நாள் வரை ஜெயம் ரவி மீது ஒரே ஒரு கிசுகிசு அல்லது வதந்தி இந்த நடிகையுடன் ஊர் சுற்றுகிறார் இந்த நடிகருடன் தொடர்பில் இருக்கிறார் இப்படி போதை பழக்கத்துடன் சுற்றுகிறார் என்று ஒரே ஒரு விஷயத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா..?
ஒரு படத்திற்கு, 10 கோடி 15 கோடி சம்பாதிக்கக்கூடிய தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு நடிகர் அவரைப் பார்த்தால் நம்ம வீட்டுப் பையன் என்ற கண்ணோட்டத்துடன் தான் அனைத்து ரசிகர்களுமே பார்த்தார்கள். அந்த அளவுக்கு மிகவும் ஒழுக்கமான கட்டுக்கோப்பான ஒரு மனிதர் நடிகர் ஜெயம் ரவி.
அவர் தன்னுடைய மனைவியை பிரிக்கிறார் என்றால் நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். அவர் கெனிஷா என்ற பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக தன்னுடைய மனைவியை பிரிக்கிறார் என்று தவறான தகவல்களை பரப்புகிறார்கள்.
ஆனால், அது உண்மை கிடையாது இந்த இடத்தில் ஜெயம் ரவி அவர்களுடைய மாமியார் பற்றி சொல்லியாக வேண்டும். அவர் பேருக்குத்தான் பெண். ஆனால் அவருடைய நடவடிக்கைகள் எல்லாம் ஒரு ஆணை மிஞ்சியதாக இருக்கும். ஒரு தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கிறார். தன்னுடன் பணியாற்றும் நபர்களிடம் முகம் கொடுத்து பேச மாட்டார்.
எங்கேயோ பார்த்துக் கொண்டுதான் பேசுவார். நடக்கும்போது நெஞ்சை நிமிர்த்தி முகத்தை நிமிர்த்தி தான் நடப்பார். அவர் நடக்கும் தொனி அவர் பேசக்கூடிய பாவனை இதெல்லாம் ஒருவிதமாக தன் எதிரில் இருப்பவரை மிரட்டும் விதமாக எதிரில் இருப்பவரை துச்சமாக மதிக்கும் விதமாகவே இருக்கும். இது என்னுடைய தனிப்பட்ட அனுபவம்.
இதே அனுபவத்தை தான் நடிகர் ஜெயம் ரவியும் பெற்றிருக்கிறார். ஜெயம் ரவியை ஒரு நடிகராக இயங்க விடாமல். அவருடைய மார்க்கெட்டை பயன்படுத்தி தன்னுடைய பொருளாதாரத்தை எப்படி மேம்படுத்திக் கொள்வது..? என்பதை மட்டுமே கவனத்தில் வைத்திருக்கிறார் ஜெயம் ரவியுடைய மாமியார் சுஜாதா.
உச்சகட்டமாக குடும்பத்திலும் இவருடைய ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக ஜெயம் ரவியின் குழந்தைகள் அவருடைய ஜெயம் ரவியின் அப்பா அம்மாவை பார்க்க சுஜாதா அனுமதிக்கவில்லை.
இதை எந்த ஆணாவது பொறுத்துக் கொள்வானா..? பேரக்குழந்தைகள் மீது தாத்தா,பாட்டிக்கு இருக்கும் பாசத்திற்கு தடையாக நின்றுள்ளார் சுஜாதா.மறுபக்கம் ஜெயம் ரவி தனிப்பட்ட முறையில் தன்னுடைய பணத்திலிருந்து தன்னுடைய பெற்றோர்களுக்கு செலவு செய்வதை அவர்கள் விரும்பவில்லை.
ஏதாவது செய்தால் உடனே அவர் மனம் நோகும் படி பேசுவது, அவரை கோபப்படுத்துவது போன்ற விஷயங்களை செய்திருக்கிறார்கள். ஜெயம் ரவி பணம் கொடுத்து தான் அவருடைய பெற்றோர் வாழ வேண்டும் என்ற சூழலில் அவர்கள் இல்லை.
ஆனால், ஒரு மகனாக ஜெயம்ரவிக்கு தன்னுடைய பெற்றோர்களுக்கு இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்ற ஒரு ஆசை இருக்குமா இருக்காதா..? மாதம் பத்தாயிரம் சம்பளம் வாங்கும் ஒரு ஆணுக்கு தன்னுடைய பெற்றோருக்கு இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கும் போது.. கோடி கோடியாக சம்பாதிக்கும் ஒரு நபருக்கு தன்னுடைய பெற்றோருக்கு இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்ற ஆசை இருப்பதில் நியாயம் இருக்கிறதா இல்லையா..? ஆனால் ஜெயம் ரவி கெநிஷா என்ற பெண் மீது ஏற்பட்ட காதலால் தான் ஆர்த்தியை பிரிந்தார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
தற்போது வந்த, ஜெயம் ரவி தான் என்னுடைய புருஷன்.. நான் இன்னும் அவருடைய மனைவிதான்.. என்று அறிக்கை விடும் ஆர்த்தி அவருடன் இருக்கும்போதே அவருக்கு ஏற்பட்ட தர்ம சங்கடமான சூழ்நிலைகளில் இருந்து அவரை மீட்டெடுக்க வேண்டும். அவருக்கு துணையாக நின்றிருக்க வேண்டும்.. அவருடைய அம்மாவுடன் சேர்ந்து ஜெயம் ரவியை மேலும் கொடுமை படுத்தியுள்ளார்.
உச்சகட்டமாக, ஜெயம் ரவியை சந்தேகப்பட்டுள்ளார். அவரை சந்தேகப்படுவதும் அவரை பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இயங்க விடாமல் செய்ததும் இப்படி குட்ட குட்ட குனிந்து பார்த்த ஜெயம் ரவி ஒரு கட்டத்தில் கொதித்து எழுந்து விட்டார். மனைவியை பிரிந்து வந்து விட்டார். இனிமேல் பேசி பயன் ஒன்றும் இல்லை.
அதிகபட்சமாக நீதிமன்றத்தின் மூலம் ஏதாவது நிவாரணம் தேடலாம் அவ்வளவுதான். அதற்கும் ஜெயம் ரவி தயாராக இருக்கிறார் எனும் போது ஜெயம் ரவியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி ஊடகங்கள். இப்படி அவரைப் பற்றிய செய்திகளை பரப்புவது தான் அதுதான் செய்து கொண்டிருக்கிறார்கள் ஆர்த்தி மற்றும் அவருடைய அம்மா சுஜாதா ஆகிய இருவரும்.
ஒரே ஒரு விஷயம் ஆண்கள் தங்களுக்கு விருந்தாக இருக்கக்கூடிய பெண்களை குடும்பத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். தனக்கு மருந்தாக இருக்கக்கூடிய பெண்களை மட்டும் தான் குடும்பத்தில் சேர்த்துக் கொண்டு அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று விரும்புவார்கள். இது எல்லா ஆண்களுக்கும் இருக்கக்கூடிய பொதுவான குணம்.
ஒரு பெண்ணை ஒரு ஆண் தன்னுடைய விருந்து என நினைக்கிறான் என்றால் அந்த பெண்ணுடன் அப்படி இப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவானே தவிர.. அவழுடன் வாழ வேண்டும் என்று ஒருநாளும் ஆசைப்பட மாட்டான்.
ஆனால், அதே பெண் அந்த ஆணுக்கு மருந்தாக இருக்கிறாள் என்றால் அவருடன் வாழ்க்கை முழுதும் வாழ்வதற்கு தயாராக இருப்பான். அதைத்தான் ஜெயம் ரவி செய்திருக்கிறார். எனவே கெனிஷா ஜெயம் ரவிக்கு விருந்து அல்ல ஜெயம் ரவிக்கு சரியான மருந்தாக இருந்திருக்கிறார்.
அதனால் தான் ஜெயம் ரவியை கெனிஷாவே தன்னுடைய மனைவியாக, வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டிருப்பதை அவருடைய அறிக்கைகள் வெளிப்படுத்துகிறது என பேசி இருக்கிறார் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.