கர்ணன் படப்பிடிப்பில்.. இரவு நேரத்தில்.. நடந்த கொடுமை.. மாரிசெல்வராஜ் மீது நடிகை பகீர் குற்றச்சாட்டு!


தமிழ் சினிமாவில் நடிகைகள் தற்போது தங்களுக்கு நேரும் பிரச்சனைகளை வெளிப்படையாக பேசி வருகின்றனர். இதில், பல படங்களில் நடித்த நடிகை தீபா பாஸ்கர், சினிமாவில் தான் எதிர்கொண்ட ஏமாற்றங்கள், தொல்லைகள் குறித்து பகிர்ந்துள்ளார். 

அவரது பேச்சு, திரையுலகின் இருண்ட பக்கங்களை அம்பலப்படுத்துவதோடு, புதுமுகங்களுக்கு எச்சரிக்கையாகவும் அமைகிறது.  அவர் கூறியதாவது, ‘கர்ணன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி திருநெல்வேலி சென்றேன். 

அங்கே, மார்கழி மாத குளிரில் கடுமையான காட்சிகளில் நடித்தேன். நிறைய அடி வாங்கினேன். அதுவும் இரவு நேரத்தில் குளிர் தாங்க முடியாத கொடுமையாக இருந்தது. இருந்தாலும், இது நமக்கு நல்ல வாய்ப்பு என நினைத்துக்கொண்டு நடித்தேன்.

ஆனால், இயக்குநர் மாரி செல்வராஜ், ஊர் மக்களை நடிக்க வைத்தால் சிறப்பாக இருக்கும் என முடிவெடுத்து, அவரது காட்சிகளை நீக்கினார். இதை முன்கூட்டியே தெரிவித்திருந்தால், நேரமும் உழைப்பும் வீணாகியிருக்காது என புகார் கூறினார்.

படப்பிடிப்பில் உணவு உள்ளிட்ட வசதிகளிலும் கஷ்டப்பட்டதாக கூறுகிறார். தீபா, தான் நடித்த படங்களில் இருந்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் நிலுவையில் உள்ளதாகவும், ஒரு படம் வெளியான பிறகும் பணம் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார். 

இது, சினிமாவில் கலைஞர்களின் உழைப்புக்கு உரிய மதிப்பு வழங்கப்படாத பிரச்சனையை வெளிப்படுத்துகிறது. சினிமாவில் புதுமுகங்களை ஏமாற்றும் ஏஜெண்டுகளைப் பற்றியும் தீபா பேசினார். 

ஆரம்ப காலத்தில் “அட்ஜெஸ்ட்மெண்ட்” என்ற பெயரில் தவறான வாய்ப்புகள் வந்ததாகவும், பெரிய இயக்குநர்களின் பெயரை பயன்படுத்தி, “ஓட்டலுக்கு வரச் சொல்கிறார்” என ஏமாற்றுவதாகவும் கூறினார். 

“போட்டோ பிடித்திருக்கிறது” எனக் கூறி, பின்னர் தொடர்பு இல்லாமல் அனுப்புவது, “பப்பு பார்ட்டி” என்ற பெயரில் இளம்பெண்களை வழிநடத்துவது போன்றவை நடப்பதாக அவர் அம்பலப்படுத்தினார். 

மிக முக்கியமாக, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த இயக்குநர்கள், “அடுத்த படத்தில் வாய்ப்பு தருகிறேன்” என வாக்குறுதி அளித்து, “என்னுடன் பயணம் செய்” என தவறாக பேசுவதாக தீபா குற்றம்சாட்டினார். 

புதுமுக இயக்குநர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை எனவும் கூறினார். தீபாவின் பகிர்வு, சினிமாவில் நடிகைகள் எதிர்கொள்ளும் சவால்களை வெளிச்சமிடுகிறது. புதுமுகங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதோடு, தொழில்முறை நடைமுறைகளின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. 

இத்தகைய துணிச்சலான குரல்கள், சினிமாவில் நேர்மையான, பாதுகாப்பான சூழலை உருவாக்க உதவும்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--