அடுத்த விவாகரத்து இந்த நடிகர் தான் எழுதி வச்சிக்கோங்க.. சுசித்ரா பகீர்!


தமிழ் சினிமாவில் பின்னணிப் பாடகியாகவும், வானொலி தொகுப்பாளராகவும் பிரபலமான சுசித்ரா, சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமா நடிகர்களின் மனைவிகளின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து பரபரப்பான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேட்டியில், நடிகர்களின் மனைவிகள் தவறான முடிவுகளை எடுப்பதற்கு சினிமா துறையின் பிரகாசமான வாழ்க்கை முறையும், பார்ட்டி கலாசாரமும் முக்கியக் காரணமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கருத்துக்கள், குறிப்பாக நடிகர்கள் ஜெயம் ரவி மற்றும் ஜீவாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அவரது கூற்றுகள், இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சுசித்ராவின் முக்கிய கருத்துக்கள்

சுசித்ராவின் பேட்டியில், சினிமா நடிகர்கள் தங்கள் மனைவிகளை சக நடிகர்களின் நண்பர்களுடன் பழக அனுமதிப்பது மற்றும் பார்ட்டி விருந்துகளுக்கு அழைத்துச் செல்வது ஆகியவை அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சினைகளை உருவாக்குவதாக அவர் வாதிடுகிறார்.

அவரது கருத்துப்படி, சினிமா துறையின் ஆடம்பரமான வாழ்க்கை முறையும், பொதுவெளியில் நடைபெறும் கொண்டாட்டங்களுக்கும் சினிமா பார்ட்டிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளும் நடிகர்களின் மனைவிகளால் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

சினிமா துறையினரின் புகழ், பணம், கலாச்சாரம், அவர்களை சுற்றி இருக்கும் Aura, இதையெல்லாம் கண்டு நடிகர்களின் மனைவிகள் மிரண்டு போய் விடுகிறார்கள். இதெல்லாம், போலியானது என்று அவர்கள் புரிந்து கொள்வதற்குள் அவர்களின் வாழ்கையே திசை திரும்பி விடுகிறது.

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணை, இப்படி சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் பார்ட்டிக்கு அழைத்து வந்தால் அந்த சூழலை ஹேண்டில் செய்ய முடியாமல் திணறி போய் விடுகிறார்கள். அப்படி ஒரு மனநிலையில் இருக்கும் அவர்களை எளிமையாக நாசம் செய்து விடுகிறார்கள்.

இதனால், அவர்கள் விவாகரத்து உள்ளிட்ட தவறான முடிவுகளை எடுக்கும் சூழலுக்கு தள்ளப்படுவதாக அவர் கூறுகிறார்.சுசித்ரா மேலும் குறிப்பிடுகையில், நடிகர்கள் தங்கள் சக நடிகர்களை நண்பர்களாகக் கருதினாலும், அந்த நண்பர்கள் நடிகர்களின் மனைவிகளை அதே கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை என்று தெரிவித்தார். 

இதனால், மனைவிகள் "கண்ணைக் கட்டி காட்டில் விடப்பட்ட" நிலைக்கு உள்ளாகிறார்கள் என்று அவர் விமர்சிக்கிறார். இந்தச் சூழல் அவர்களை ஏமாற்றப்படவும், தவறாக வழிநடத்தப்படவும் வழிவகுக்கிறது என்று அவர் குற்றம்சாட்டுகிறார்.

ஜெயம் ரவி மற்றும் ஜீவா குறித்த குற்றச்சாட்டுகள்

சுசித்ராவின் பேட்டியில் மிகவும் சர்ச்சைக்குரிய பகுதி, நடிகர்கள் ஜெயம் ரவி மற்றும் ஜீவாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அவரது கருத்துக்கள். 

ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, சினிமா துறையின் தவறான செல்வாக்கால் "நாசமாக்கப்பட்டார்" என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஜீவாவின் மனைவி சுப்ரியாவால் ஜீவா "நிம்மதியை இழந்து" மோசமான மனநிலையில் இருப்பதாகவும், அவரது குடும்ப மதிப்பு கருதி தனது வேதனைகளை அடக்கிக்கொண்டு இருப்பதாகவும் கூறினார். 

இதுமட்டுமல்லாமல், "அடுத்த விவாகரத்து ஜீவாவாகத்தான் இருக்கும்" என்று அவர் துணிச்சலாகக் கணித்துள்ளார்.

சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பிரித்தல்

சுசித்ரா தனது பேட்டியில், நடிகர்கள் தங்கள் சினிமா வாழ்க்கையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் தனித்தனியாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

இரண்டையும் ஒன்றாகக் கலப்பது தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும் என்று அவர் எச்சரிக்கிறார். 

பல நடிகர்கள் தங்கள் மனைவிகளை விருது விழா, பிரபலங்களின் திருமணம், பார்ட்டிகளுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்ப்பதற்கு காரணம், இந்தச் சூழலின் சிக்கல்களை அவர்கள் நன்கு உணர்ந்திருப்பதால் தான் அவர் குறிப்பிடுகிறார்.

இவருடைய இந்த பேட்டி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--