தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளாக பயணித்த நடிகர் பப्लு ப்ருத்விராஜ், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஆரம்ப காலத்தில் இயக்குநர் கே.பாலசந்தர் படங்களில் நடித்து புகழ் பெற்ற இவர், பின்னர் சின்னத்திரை தொடர்களான வாணி ராணி, கண்ணான கண்ணே போன்றவற்றில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
இடையில் பல சர்ச்சைகளையும் சந்தித்த அவர், தற்போது மீண்டும் சினிமாவில் பிஸியாகி, பாலிவுட் படமான அனிமல் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து கவனம் பெற்றார். பேட்டியில் அவர், சினிமாவில் 40 ஆண்டுகளாக இருக்கிறேன். போராட்டங்கள், அவமானங்களை எல்லாம் பார்த்துவிட்டேன்.
ஒரு கட்டத்தில் மன அழுத்தத்தால் பணம், சொத்து, வீடு என அனைத்தையும் இழந்தேன். அப்போது வாணி ராணி சீரியலில் ராதிகாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், அது என் வாழ்க்கையின் மிகப்பெரிய தவறு. ராதிகா தமிழ் சினிமாவின் அவ்வையார். அவருக்கு ஜோடியாக நடித்ததால், நானும் வயதானவன் என முத்திரை குத்தப்பட்டேன். அந்த சீரியல் எனக்கு ‘கிழவன்’ என்ற பெயரை வாங்கித் தந்தது என்று வேதனையுடன் கூறினார்.
இவரது பேச்சு சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.