பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ஹுமா குரேஷி, தமிழ் சினிமாவிலும் தனது முத்திரையை பதித்தவர்.
காலா மற்றும் துணிவு போன்ற படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான இவர், தனது நடிப்பை விடவும் இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களால் அடிக்கடி பேசப்படுபவர்.
சமீபத்தில், அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஹுமா குரேஷி சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்களில், வித்தியாசமான டிசைன் செய்யப்பட்ட ஒரு உடையை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.
இந்த உடை, கழுத்துக்கு மேலே பாவாடை பறப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள், ஒருபுறம் அவரது துணிச்சலான முயற்சியை பாராட்டினாலும், மறுபுறம் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யவும் தவறவில்லை.
"இதென்னங்க, பாவாடை கழுத்துக்கு மேல பறக்குது?" என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இதுபோன்ற கிண்டல்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. ஹுமா குரேஷி எப்போதும் தனது உடைகள் மற்றும் புகைப்படங்களால் ரசிகர்களை ஈர்க்கும் ஒரு நடிகையாக இருந்து வருகிறார்.
அவரது இந்த புதிய முயற்சியும் ரசிகர்களிடையே கவனம் பெற்றிருக்கிறது. பாலிவுட்டில் கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர், டெட் பியார் டெட் ஹேட் போன்ற படங்களின் மூலம் பிரபலமான ஹுமா, தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் மற்றும் அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியிருக்கிறார்.
இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டாலும், இணையத்தில் அவரது கவர்ச்சி தோற்றமே அடிக்கடி பேசு பொருளாகிறது. இந்த புகைப்படங்கள் ஒருபுறம் கிண்டலுக்கு ஆளாகியிருந்தாலும், மறுபுறம் ஹுமாவின் தன்னம்பிக்கையையும், புதுமையை விரும்பும் அவரது அணுகுமுறையையும் ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.
இது ஹுமா குரேஷியின் ரசிகர் பட்டாளத்தை மேலும் விரிவாக்கியிருக்கிறது.