நேரலையில் செய்தி வாசிக்கும் போது கழண்ட மேலாடை.. விளாசும் பொதுமக்கள்! தீயாய் பரவும் வீடியோ!


அல்பேனியா : ஒரு தொலைக்காட்சி சேனல் உலக அளவில் சர்ச்சையை கிளப்பியது பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் தான் இது. "Zjarr TV" என்ற இந்த சேனல், 2015 முதல் பெண் செய்தி வாசிப்பாளர்களை மார்பகம் தெரியும் அளவுக்கு திறந்த ஜாக்கெட்டுகளை அணிய வைத்து செய்தி வாசிக்கச் செய்தது.

இது குறித்து சேனல் உரிமையாளர் இஸ்மெட் ட்ரிஷ்டியிடம் கேட்ட போது, இந்த முயற்சி, “அல்பேனியாவில் செய்திகள் அரசியல் சக்திகளால் புனையப்படுகின்றன, எனவே மக்களுக்கு ‘நிர்வாண உண்மையை’ வழங்க விரும்புகிறோம்” என்று குறியீட்டு அர்த்தத்தில்.

அதாவது செய்திகளை எந்த ஒழிவு மறைவும் இல்லாமல் உள்ளதை உள்ளபடியே கொடுக்கிறோம் என்பதற்கான அடையாளம் இதான் இது என கூறினார்.

ஆனால், இது உண்மையில் உண்மையை வெளிப்படுத்தியதா, அல்லது பெண்களை வெறும் பொருளாக மட்டும் பார்க்க செய்ததா? என்ற கேள்வி எழுகிறது. 

முதலில், 21 வயது மாணவியான என்கி பிராகாஜ் இப்படி செய்தி வாசித்து பிரபலமானார். அவரது தோற்றம் சமூக ஊடகங்களில் வைரலானது, ஆனால் பின்னர் அவர் பிளேபாய் பத்திரிகைக்கு மேலாடையின்றி புகைப்படதிற்கு போஸ் கொடுத்த காரணத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டார். 

அவரைத் தொடர்ந்து கிரெட்டா ஹோக்ஸ்ஹாஜ் இதே பாணியில் செய்தி வாசித்து கவனம் பெற்றார். உச்ச கட்டமாக செய்தி வாசித்துக்கொண்டிருக்கும் போது நேரலையில் திடீரென மேலாடை முழுவதுமாக விலகியது பரபரப்பை கிளப்பியது. சேனல் உரிமையாளர் இதை ஒரு புரட்சிகர முயற்சியாக பாராட்டினாலும், அல்பேனியா ஒரு பாரம்பரியமான நாடு என்பதால் இது பலரை அதிர்ச்சியடைய வைத்தது. 

சுமார் 60% மக்கள் முஸ்லிம்களாக இருக்கும் இந்த நாட்டில், பெண்களை இப்படி சித்தரிப்பது பெரும் விமர்சனத்தை சந்தித்தது. சமூக ஊடகங்களில் சிலர் இதை “தைரியமான முயற்சி” என்று பாராட்டினாலும், பலர் “பெண்களை பொருளாக்கும் செயல்” என்று கண்டித்தனர். 

இதையும் படிங்க : “பசங்களோ ஜட்டி வெளியே தெரிவதை பார்க்கும் போது” கூச்சமின்றி கூறிய நடிகை வரலட்சுமி சரத்குமார்

அல்பேனிய பத்திரிகையாளர் சங்கத் தலைவர் அலெக்ஸாண்டர் சிபா, “இது ஊடகங்களின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கிறது” என்று கூறினார். இருப்பினும், இந்த சர்ச்சை சேனலின் பார்வையாளர் எண்ணிக்கையை உயர்த்தியதாக உரிமையாளர் பெருமையாக கூறுகிறார். 

இந்த முயற்சி ஒரு பக்கம் பார்வையாளர்களை ஈர்த்தாலும், மறுபக்கம் பாலியல் சுரண்டல் மற்றும் பெண்களை மதிப்பிறக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது. உண்மையை வெளிப்படுத்துவதாக தொடங்கப்பட்ட இந்த முயற்சி, உண்மையில் சமூகத்தில் ஆழமாக வேரூன்றிய பாலின பாகுபாட்டை மட்டுமே வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. 

‘நிர்வாண உண்மை’ என்ற பெயரில் நடக்கும் இத்தகைய முயற்சிகள், உண்மையை வெளிப்படுத்துவதை விட சர்ச்சைகளைத்தான் அதிகம் உருவாக்கின என்பது தான் உண்மை.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--