பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா, சமீபத்திய பேட்டியில் தனது தந்தையின் மது மற்றும் புகைப்பழக்கம், அவரது வாழ்க்கை முறை, மற்றும் மரணம் குறித்து வெளிப்படையாகப் பேசியது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அர்ச்சனா கூறியதாவது, “எனது தந்தைக்கு மதுப்பழக்கம் இருந்தது. சனி, ஞாயிறு கிழமைகளில் ஒரு குவார்ட்டர் மது அருந்தினால் அவருக்கு மகிழ்ச்சி. அவர் தனது வாழ்க்கையை ராஜாவைப் போல வாழ்ந்தார்.
மது அருந்திய பிறகு அமைதியாக இருக்கமாட்டார்; அவரது அலப்பறைகள் வேறு லெவலில் இருக்கும். மேலும், அவர் ஸ்டைலாக சிகரெட் பிடிப்பார், அது ஹீரோவைப் பார்ப்பது போல இருக்கும்.
ஆனால், இந்த பழக்கங்களே அவரது மரணத்திற்கு காரணமாக அமைந்தன.” அவரது தந்தை மரணம் குறித்து, “வண்டியில் வந்து இறங்கி, ஸ்டாண்ட் போட்டுவிட்டு நின்றார்.
திடீரென நெஞ்சைப் பிடித்து விழுந்தார். அந்த இடத்திலேயே உயிரிழந்தார். கஷ்டப்பட்டு இறக்கவில்லை,” என்று கூறினார். “ஓல்ட் மாங்க் ரம் அவருக்கு மிகவும் பிடிக்கும்,” என்று அவர் கூச்சமின்றி பகிர்ந்தார்.
இந்த வெளிப்படையான பேச்சு, சமூக ஊடகங்களில் விவாதத்தை தூண்டியுள்ளது. சிலர் அவரது நேர்மையை பாராட்ட, மற்றவர்கள் இதுபோன்ற தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்ததற்கு விமர்சித்துள்ளனர்.