ஆடையில்லாமல்.. போட்டோ எடுத்து அந்த உறுப்பை Zoom செய்து.. அதிர வைத்த சமீரா ரெட்டி!

தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை சமீரா ரெட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி மற்றும் உடல் ஏற்பு குறித்து அடிக்கடி பதிவிடுவது வழக்கம். 

சமீபத்தில், அவர் தனது உடலில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் (தழும்புகள்) பற்றிய புகைப்படத்தை பகிர்ந்து, உடல் மீதான தன்னம்பிக்கை குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டார். 

அவர் கூறியதாவது: “உங்கள் உடலில் எந்தப் பகுதியை நீங்கள் வெறுக்கிறீர்கள்? ஆடையில்லா உடலை புகைப்படம் எடுத்து, பிடிக்காத பகுதியை ஜூம் செய்து பார்க்கிறீர்களா? தொடைகள் தளர்ந்துவிட்டன, மார்பின் அளவு, தழும்புகள் என்று ஒவ்வொரு காலையும் அவநம்பிக்கையுடன் எழுவது யாருக்கு நன்மை? நம் உடல் நம் குரல் போன்றது, அதை மாற்றவோ மறுக்கவோ முடியாது. 

உங்கள் உடலை அன்புடன் ஏற்றுக்கொள்ள பழகுங்கள். உங்களுக்கு உங்கள் உடல் மீது நம்பிக்கை இல்லையென்றால், தன்னம்பிக்கை எப்படி வரும்? உடல் எப்படி இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.” இந்தப் பதிவு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஒரு நடிகை இவ்வளவு வெளிப்படையாக உடல் ஏற்பு குறித்து பேசியது பலரை அதிர்ச்சியடைய வைத்தாலும், பலர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி, உடல் மீதான நம்பிக்கை குறித்த விவாதத்தை தூண்டியுள்ளது.