அடக்க ஒடுக்கமாக இருந்த பிரியங்கா மோகனா இது? அசரடிக்கும் மாடர்ன் லுக்கில் தாறுமாறு போஸ்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியங்கா மோகன், சமீபத்தில் மாடர்ன் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் போஸ் கொடுத்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

'டாக்டர்', 'டான்', 'எதற்கும் துணிந்தவன்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த பிரியங்கா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில், அவர் மாடர்ன் உடையில் அழகிய போட்டோஷூட் நடத்தியுள்ளார், இது இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

இஸ்தான்புல் நகரில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களில், ட்ரெண்டி உடையில் பிரியங்கா கொடுத்த கவர்ச்சியான போஸ்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன. 

அவரது புன்னகை மற்றும் நேர்த்தியான தோற்றம் பலரையும் மயக்கியுள்ளது. பிரியங்கா மோகன், தமிழ் சினிமாவில் 'பிரதர்' படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்திருந்தார், ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 

இருப்பினும், தெலுங்கு சினிமாவில் 'சரிபோதா சனிவாரம்' படம் மூலம் மாபெரும் வெற்றியை பெற்றார். தற்போது, விஜய் தேவரகொண்டாவுடன் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பகிர்ந்து வரும் பிரியங்கா, இளைஞர்களின் பேவரைட் நாயகியாக திகழ்கிறார்.

------Advertisement------
------Advertisement------