ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா கைது? காரணம் தெரிந்து அதிர்ச்சியில் கோடம்பாக்கம்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக சென்னை காவல்துறையால் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணையில் உள்ளார். 

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், ஸ்ரீகாந்த் தொடர்ச்சியாக போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதை அடுத்து, அவர் NDPS (Narcotic Drugs and Psychotropic Substances) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 






முன்னாள் அதிமுக உறுப்பினர் பிரசாத், நுங்கம்பாக்கம் பாரில் நடந்த மோதல் மற்றும் போதைப்பொருள் வழக்கில் கைதாகி, விசாரணையில் ஸ்ரீகாந்துக்கு கோகெய்ன் உள்ளிட்ட போதைப்பொருட்களை வழங்கியதாக கூறியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதனிடையே, பிரபல நடிகர் கிருஷ்ணாவும் இந்த வழக்கில் சிக்கியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ணா, கழுகு, மாரி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மற்றும் இயக்குநர் விஷ்ணு வரதனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சென்னை காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு (ANIU), கிருஷ்ணாவை சென்னைக்கு அழைத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளது. பிரசாத், கிருஷ்ணாவுக்கும் போதைப்பொருள் வழங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். 

இந்த வழக்கு, தமிழ் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை முடிவில் மருத்துவ அறிக்கைகள் மற்றும் மேலதிக ஆதாரங்கள் அடிப்படையில், இரு நடிகர்கள் மீதான நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும்

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--