பிரபல மலையாள மற்றும் தமிழ் சின்னத்திரை நடிகையான பிரவீனா, சர்ச்சைக்குரிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளன. பிரவீனா, ‘ராஜா ராணி 2’ உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும், ‘சாமி ஸ்கொயர்’, ‘கோமாளி’, ‘வீட்ல விசேஷம்’ போன்ற தமிழ் திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர்.
மலையாள திரையுலகில் ‘அக்னிசாட்சி’, ‘ஒரு பெண்ணும் ரண்டாணும்’ போன்ற படங்களுக்காக கேரள மாநில விருதுகளை பெற்றவர். மறுபுறம், ஸ்ரீசாந்த் 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையில் வெற்றி பெற்ற இந்திய அணியின் முக்கிய வீரராக இருந்தவர்.
இருப்பினும், 2013 ஐபிஎல் ஸ்பாட்-ஃபிக்ஸிங் சர்ச்சையில் சிக்கி, பிசிசிஐ-யால் தடை விதிக்கப்பட்டு, பின்னர் 2019-ல் தடை 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டவர். 2022-ல் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஸ்ரீசாந்த், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலும் பங்கேற்று கவனம் ஈர்த்தவர்.
பிரவீனாவின் இன்ஸ்டாகிராம் பதிவில், ஸ்ரீசாந்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளன.
இதற்கு முன், பிரவீனா தனது புகைப்படங்கள் மற்றும் அவரது மகளின் புகைப்படங்கள் ஆபாசமாக மார்ஃபிங் செய்யப்பட்டு இணையத்தில் பரவியதாக சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது ஸ்ரீசாந்துடனான புகைப்படங்கள் மீண்டும் அவரை பேசு பொருளாக்கியுள்ளன. இந்த புகைப்படங்கள் குறித்து பிரவீனா அல்லது ஸ்ரீசாந்த் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை.
இருப்பினும், இந்த வைரல் புகைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் பரவி வருகின்றன.