தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்யின் 69-வது மற்றும் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’, இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வருகிறது.
அரசியல் பின்னணி கொண்ட இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரியாமணி, ஸ்ருதி ஹாசன், நரேன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடிக்கிறது.
அனிருத் இசையமைப்பில், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் இப்படம், 2026 ஜனவரி 9-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
விஜய்யின் கடைசி படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கு மாபெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தில் நடிக்கும் நடிகை மமிதா பைஜு, விஜய் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“விஜய் சார் நேரம் தவறாதவர். படப்பிடிப்புக்கு எப்போதும் சரியான நேரத்தில் வருவார். மிகவும் கூலான நபர். படப்பிடிப்பில் எவ்வளவு பிரச்சனை வந்தாலும், அதை கூலாக கையாள்வார்.
நான் அவரிடம் பல விஷயங்களை பேசுவேன், ஆனால் அவர் ‘ம்ம்’, ‘ஹான்.. ஓஹோ..’ என்று சுருக்கமாக பதிலளித்து முடித்துவிடுவார்,” என்று மமிதா உருக்கமாக பகிர்ந்தார். தொடர்ந்து பேசிய அவர், விஜய் சார் அதிகமாக பேசமாட்டார் என சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன் அதுக்குன்னு இப்படி பேசுவார் என எதிர்பாக்கல.. என்று கூறினார்.
விஜய்யின் எளிமையையும், பணிவையும் பறைசாற்றும் இந்த பேட்டி, ரசிகர்களை கவர்ந்துள்ளது. ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் பாடல் டிசம்பர் 2025-ல் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.