கேம் சேஞ்சர் படத்துல தினமும் இதை பண்ணாரு.. ஷங்கர் குறித்து திடுக்கிடும் தகவலை கூறிய தயாரிப்பாளர்!

தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு, ‘கேம் சேஞ்சர்’ படத்தின் தோல்விக்கு இயக்குநர் ஷங்கரை நம்பியதே தனது தவறு என வெளிப்படையாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

தெலுங்கு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், 58-60 படங்களை இளம் இயக்குநர்களுடன் தயாரித்த தனது அனுபவத்தை குறிப்பிட்ட அவர், முதன்முறையாக பெரிய இயக்குநரான ஷங்கரை நம்பியது தவறு எனக் கூறினார். 

கேம் சேஞ்சர் படத்துல தினமும் இதை பண்ணாரு.. ஷங்கர் குறித்து திடுக்கிடும் தகவலை கூறிய தயாரிப்பாளர்! | Dil Raju openup about director shankar bad creation process

‘கேம் சேஞ்சர்’ படத்தின் எடிட்டர் ஷமீர் முகமது, ஷங்கரிடம் தொழில்முறை அணுகுமுறை இல்லை என்றும், 4.5 மணி நேர ஃபூட்டேஜை வைத்து படத்தை எடிட் செய்ய சொன்னதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். 

இதற்கு பதிலளித்த தில் ராஜு, படத்தின் தோல்விக்கு முழு பொறுப்பையும் தானே ஏற்பதாகவும், சரியான திட்டமிடல் மற்றும் கட்டுப்பாடு இல்லாததால் தேவையற்ற செலவுகள் ஏற்பட்டதாகவும் கூறினார். 

ராம் சரண், ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு பிறகு பெரிய வெற்றியை எதிர்பார்த்து இப்படத்தில் இணைந்ததாகவும், ஆனால் அவருக்கு வெற்றியோ அங்கீகாரமோ கிடைக்காதது தனக்கு மன வருத்தத்தை அளிப்பதாகவும் தில் ராஜு உணர்ச்சிவசப்பட்டு பேசினார். 

ஷங்கர் படப்பிடிப்பு தளத்தில் தினமும் கிச்சடி தான் கிண்டிக்கொண்டிருந்தார், ஷங்கரின் தவறான திட்டமிடல் படத்தை பாதித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தயாரிப்பாளராக, சரியான ஒப்பந்தம் மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்க தவறியதற்கு தானே பொறுப்பு எனவும் தில் ராஜு ஒப்புக்கொண்டார். 

ராம் சரண் ரசிகர்கள் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்கள், ஷங்கரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ‘இந்தியன் 2’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ படங்களின் தோல்விக்கு பிறகு, ஷங்கரின் கனவு திட்டமான ‘வேள்பாரி’ படம் தற்போதைக்கு நிறைவேற வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதே சமயம் இயக்குனர் ஷங்கர் கேம் சேஞ்சர் படத்திற்கு 7 மணி நேரம் 47 நிமிடங்கள் ஓடக்கூடிய காட்சிகளை பதிவு செய்து அதன் பிறகு அதனை 2 மணி நேரம் 59 நிமிடங்கள் ஓடக்கூடியதாக வெட்டி.. படம் வெளியான பிறகு 14 நிமிட காட்சிகளை வெட்டி 2 மணி நேரம் 45 நிமிடம் ஓடக்கூடிய படமாக மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது 3 படங்கள் தயாரிப்பதற்கு ஆகும் செலவை ஒரே படத்தில் இழுத்து விட்டுள்ளார் இயக்குனர் ஷங்கர். மேலும், படமாக்கப்பட்ட 5 மணி நேரத்திற்கும் அதிகமான காட்சிகள் வெறுமனே வெட்டி வீசி பணத்தை குப்பையாக்கி விட்டார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. 

ஷங்கரும் தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார். அவருடைய சொந்த பணத்தில் இப்படி ஒரு படத்தை திட்டமிடுவாரா..? எழுதும் போதே முறையாக எழுத வேண்டாமா..? என்று பலரும் இயக்குனர் ஷங்கரை விமர்சித்து வருகின்றனர்.  

Summary in English : Producer Dil Raju admitted trusting director Shankar for Game Changer was a mistake, taking full responsibility for its failure. He criticized Shankar’s unprofessionalism and poor planning. Fans slam Shankar, and his dream project Velpari seems unlikely after Indian 2 and Game Changer flops.