Posts

Showing posts with the label Dil Raju

கேம் சேஞ்சர் படத்துல தினமும் இதை பண்ணாரு.. ஷங்கர் குறித்து திடுக்கிடும் தகவலை கூறிய தயாரிப்பாளர்!

Image
தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு, ‘கேம் சேஞ்சர்’ படத்தின் தோல்விக்கு இயக்குநர் ஷங்கரை நம்பியதே தனது தவறு என வெளிப்படையாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.  தெலுங்கு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், 58-60 படங்களை இளம் இயக்குநர்களுடன் தயாரித்த தனது அனுபவத்தை குறிப்பிட்ட அவர், முதன்முறையாக பெரிய இயக்குநரான ஷங்கரை நம்பியது தவறு எனக் கூறினார்.  ‘கேம் சேஞ்சர்’ படத்தின் எடிட்டர் ஷமீர் முகமது, ஷங்கரிடம் தொழில்முறை அணுகுமுறை இல்லை என்றும், 4.5 மணி நேர ஃபூட்டேஜை வைத்து படத்தை எடிட் செய்ய சொன்னதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.  இதற்கு பதிலளித்த தில் ராஜு, படத்தின் தோல்விக்கு முழு பொறுப்பையும் தானே ஏற்பதாகவும், சரியான திட்டமிடல் மற்றும் கட்டுப்பாடு இல்லாததால் தேவையற்ற செலவுகள் ஏற்பட்டதாகவும் கூறினார்.  ராம் சரண், ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு பிறகு பெரிய வெற்றியை எதிர்பார்த்து இப்படத்தில் இணைந்ததாகவும், ஆனால் அவருக்கு வெற்றியோ அங்கீகாரமோ கிடைக்காதது தனக்கு மன வருத்தத்தை அளிப்பதாகவும் தில் ராஜு உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.  ஷங்கர் படப்பிடிப்பு தளத்தில் தினமும் கிச்சடி தான் கிண்டிக...