தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் ஒரு காலத்தில் முக்கிய நடிகராக வலம் வந்தவர் நடிகர் கரண். இவரது இயற்பெயர் ரகு. 1982-ல் வெளியான மலையாளப் படமான இனா மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கரண், மாஸ்டர் ரகு என்ற பெயரில் 20-க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
1974-ல் ராஜஹம்சம் படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநில விருது பெற்றவர். தமிழில் தீச்சட்டி கோவிந்தன் படத்தில் சிறு வேடத்தில் நடித்த கரண், கமல்ஹாசனின் நம்மவர் (1994) படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து, கரண் என்ற பெயரில் பிரபலமானார். இப்படம் அவருக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

பின்னர், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் முத்திரை பதித்த கரண், 2006-ல் கொக்கி படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். கருப்பசாமி குத்தகைக்காரன், காத்தவராயன், தம்பி வெட்டோட்டி சுந்தரம் ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார்.
ஆனால், இப்படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. 2016-ல் வெளியான உச்சத்துல சிவா அவரது கடைசி படமாக அமைந்தது. அதன் பிறகு, கரண் திரையுலகில் இருந்து மறைந்தார்.
சமீபத்தில், மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில், கரணின் வாழ்க்கையில் ஒரு ஆண்ட்டி வயதுடைய பெண்ணின் செல்வாக்கு இருந்ததாகவும், அவர் அவருக்கு மேனேஜராக இருந்ததாகவும் கிசுகிசுக்கள் பரவியதாகக் கூறினார்.
இந்தப் பெண்ணால் கரணின் சினிமா மார்க்கெட் சரிந்ததாகவும் வதந்திகள் இருந்தன.
கதை கேட்பது, அட்வான்ஸ் பெறுவது, சம்பளம் நிர்ணயிப்பது என தன் இஷ்டத்துக்கு செய்து கரண் சினிமா வாழ்க்கையை காலி செய்தார். இதனால், ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் இந்தியாவை விட்டே வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார் கரண்.
நடிகராக இருந்து விட்டு இந்தியாவில் வேறு வேலைக்கும் போக முடியாது. இதனால், வெளிநாட்டிற்கு சென்று ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்ற முடிவில் இருந்தார் கரண். இருப்பினும், இவை முழுக்க உண்மையென உறுதிப்படுத்த முடியாது எனவும் செய்யாறு பாலு தெரிவித்தார்.
இந்தத் தகவல் தற்போது ரசிகர்களிடையே விவாதப் பொருளாகி, கரணின் திரையுலக மறைவு குறித்து மீண்டும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
English Summary : Actor Karan, real name Raghu, Senior journalist Cheyyar Balu recently mentioned rumors of an older woman’s influence as Karan’s manager, allegedly impacting his career decline, though unverified. This has reignited discussions about his exit from cinema.
