தமிழகத்திற்கு புதிய முதல்வர் இவரா..? அதிரும் அரசியல் களம்.. ஸ்டாலின் உடல்நிலை உண்மை இது தான்..!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள் அவரை மூன்று நாட்கள் கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்று அறிக்கை வெளியாகியுள்ளது. 

தலைசுற்றல் காரணமாக ஏற்பட்ட இந்த நிலை குறித்து மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு அழைத்து செல்லப்படலாம் என்றும், அதற்கு குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டியிருக்கலாம் என்றும் சில தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. 

ஆனால், இந்த தகவல்களுக்கு இதுவரை அதிகாரப்பூர்வ உறுதியாகவோ அல்லது மருத்துவ அறிக்கையாகவோ எவ்வித ஆதாரமும் இல்லை.மேலும், முதல்வர் வெளிநாடு செல்வதற்கு இடையில் பொறுப்பு முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்கலாம் என்றும், மாறாக அவர் துணை முதலமைச்சராகவே முதல்வரின் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. 

தற்போது துணை முதலமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின், தனது தந்தையின் உடல்நலம் குறித்து மருத்துவமனையில் கவனம் செலுத்தி வருகிறார். 

எனினும், இந்த மாற்றங்கள் குறித்து திமுக அல்லது தமிழக அரசு சார்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.சமூக வலைதளங்களில் இது தொடர்பான விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் முதல்வரின் உடல்நலம் குறித்து அக்கறை தெரிவித்து வருகின்றனர். 

விரைவில் தமிழக அரசு அல்லது திமுக தரப்பில் இது குறித்த விரிவான அறிக்கை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் விரைவில் குணமடைந்து பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பலர் வாழ்த்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Tamil Nadu CM M.K. Stalin, admitted to Apollo Hospital due to health issues, requires three days of monitoring as per a medical report. Rumors suggest he may travel abroad for further treatment, needing a three-month rest, with Udhayanidhi Stalin potentially becoming CM or continuing as Deputy CM. No official confirmation has been issued yet, with an update expected soon from the government or DMK.