மு.க.ஸ்டாலின் அதிரடி! யாருமே கனவில் கூட நினைத்து பார்க்காத முடிவு! அதிர்ச்சியில் தவெக!
சென்னை, மே 7 : தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பாக மாறியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சி அமைக்க திமுக வெளியில் இருந்து ஆதரவு அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே வேளையில், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரடியாகப் போட்டியிட உள்ளதாகவும் அங்கே அதிமுக போட்டியிடாது எனவும், கொளத்தூர் தொகுதியில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து அவர் இன்னும் மீளவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல்கள் அரசியல் அரங்கில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான காய் நகர்த்தல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த புதிய திருப்பம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவரது கட்சி ஆட்சி அமைக்க, திமுக தரப்பில் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ள...