கடலூர் மாவட்டம், நெய்வேலி, இந்திரா நகர் பி-2, மாற்றுக் குடியிருப்பு, 5-வது மெயின் ரோட்டில் வசித்து வந்த கொளஞ்சியப்பன் (62), என்எல்சி இன்கோசர்வ் சொசைட்டியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தற்போது நெய்வேலி ஆர்கேட் எதிரே உள்ள ஜவுளிக் கடையில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். இவரது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், முதல் மனைவிக்கு அருண் (23) என்ற மகன் உள்ளார்.

முதல் மனைவியின் மறைவுக்குப் பின், அதே பகுதியைச் சேர்ந்த பத்மாவதி (47) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பத்மாவதிக்கு முதல் திருமணத்தில் ஒரு மகளும், கல்லூரியில் பயிலும் மகனும் உள்ளனர்.
கொளஞ்சியப்பன், அதே பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கொளஞ்சியப்பன், தனது வீடு மற்றும் சொத்துகளை சசிகலாவுக்கு எழுதி வைக்கப் போவதாகக் கூறியதால், பத்மாவதி ஆத்திரமடைந்தார். இந்நிலையில், ஜூலை 2, 2025 அதிகாலை 3 மணியளவில், தூங்கிக் கொண்டிருந்த கொளஞ்சியப்பனை, பத்மாவதி கடப்பாரையால் தலையில் குத்தி கொடூரமாகக் கொலை செய்தார்.
பின்னர், விடிய விடிய உடலருகே அமர்ந்திருந்த பத்மாவதி, காலையில் மகனுக்கு போன் செய்து தம்பி.. அப்பாவ க்ஒன்னுட்டேன்பா என்று தகவல் தெரிவித்து, கணவனைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
தகவலறிந்த நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து பத்மாவதியைக் கைது செய்தனர்.
கொளஞ்சியப்பனின் உடல், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்தக் கொடூரக் கொலை, நெய்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Summary in English : In Neyveli, Cuddalore, Padmavathi (47) was arrested for brutally killing her second husband, Kolanchiyappan (62), a retired NLC employee and security guard, with a sickle. The murder stemmed from disputes over his extramarital affair and plans to transfer property to another woman, Sasikala.