சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் இரண்டாவது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 21-ம் தேதி நடைபயிற்சியின்போது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் மூன்று நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன், “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இத்திட்டத்தின் கீழ், 15-07-2025 முதல் தமிழ்நாட்டில் 5,74,614 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது, உரிய துறைகள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனவா என்பது குறித்து அவர் விசாரித்தார்.
முதலமைச்சர், மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மக்களின் தேவைகளை உரிய காலத்தில் நிறைவேற்றவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மருத்துவமனையில் தேனாம்பேட்டை மற்றும் கிரீம்ஸ் சாலை அப்போலோவில் அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியைத் தொடர வாழ்த்துவோம்.
Summary : Tamil Nadu CM M.K. Stalin, admitted to Apollo Hospital, Chennai, for health issues, continues to oversee government work. He reviewed the "Ungaludan Stalin" scheme, with 5,74,614 petitions received, instructing officials to address them promptly while undergoing medical tests.
