கடவுள் சொன்னார் என என் தோழியுடன் உடலுறவு.. பாதிரியாரின் மகள் கொடுத்த பகீர் புகார்..

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், தனது தந்தையான மோசஸ் செல்லதுரை மீது சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதபோதகர் மற்றும் வழக்கறிஞராகக் கூறப்படும் மோசஸ் செல்லதுரை, போலி பாஸ்டர் சான்றிதழை ரூ.30,000-க்கு வாங்கி, பல பெண்களை மதத்தின் பெயரால் ஏமாற்றி, தவறான உறவுகளில் ஈடுபட்டு, கர்ப்பமாக்கியதாக அவரது மகள் குற்றம்சாட்டியுள்ளார்.

மோசஸின் மகள் தனது புகாரில், தனது பெற்றோரின் காதல் திருமணம் பல பிரச்னைகளால் சிக்கலானது என்றும், தந்தை மோசஸ் பல பெண்களுடன் தவறான உறவு வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். 

அவரது தாய், மோசஸ் மற்றொரு பெண்ணை திருமணம் செய்ததால் பிரிந்து சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார். இதன்பின், மோசஸ் தனது மதபோதகர் என்ற அந்தஸ்தை பயன்படுத்தி, பல பெண்களை ஏமாற்றி, திருமணம் செய்து, கர்ப்பமாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

என்னுடைய தோழியை திருமணம் செய்துகொள்வதாக கூறி கடவுள் சொன்னார் என அவளுடன் உடலுறவு கொண்டுவிட்டு கர்ப்பமாக்கி விட்டார் என்றும் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார் மோசஸ் செல்லத்துரையின் மகள். 

“ஆயிரம் பெண்களை திருமணம் செய்வேன், யாரும் தடுக்க முடியாது,” என்று மோசஸ் பகிரங்கமாக கூறியதாகவும் அவரது மகள் தெரிவித்தார்.மோசஸ், தனது மகள் தன்னிடம் ரூ.25 லட்சம் பேரம் பேசி, ஒப்புக்கொள்ளாததால் இந்த புகாரை பொய்யாக அளித்ததாக குற்றம்சாட்டியுள்ளார். 

இருப்பினும், தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும், தந்தையின் செயல்களால் மற்ற பெண்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவே இந்த புகார் அளித்ததாகவும் அவரது மகள் தெரிவித்தார். 

“எந்த பெண்ணும் இனி என் தந்தையிடம் ஏமாறக்கூடாது,” என அவர் டிஜிபி அலுவலக வாசலில் கண்ணீருடன் கூறினார்.காவல் துறையினர் இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், மோசஸ் செல்லதுரை சட்டப்படி விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்த விவகாரம் சென்னையில் பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Summary : A 20-year-old woman from Chennai’s Annanagar accused her father, Moses Chelladurai, a self-proclaimed pastor and lawyer, of deceiving and impregnating multiple women. Filing a complaint at the DGP office, she demands justice to protect others. Moses denies the allegations, claiming extortion. Police are investigating.