ஹிமாசலப் பிரதேசத்தின் சிர்மெளர் மாவட்டத்திற்குட்பட்ட ஷில்லாய் பகுதியில் உள்ள பாந்தனா கிராமத்தில், ஹட்டி பழங்குடியினத்தைச் சேர்ந்த சுனிதா செளஹான் என்ற பெண், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பிரதீப் மற்றும் கபீல் நேகி ஆகிய இரு சகோதரர்களைத் திருமணம் செய்துகொண்டார்.
இந்தத் திருமணம், ஹட்டி சமூகத்தின் நீண்டகால பாரம்பரியமான ‘ஜோடித்ரா’ முறைப்படி, கிராம மக்கள் முன்னிலையில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களுடன் கோலாகலமாக நடைபெற்றது.

இந்தத் திருமணத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜோடித்ரா பாரம்பரியம்:
ஒரு பெண், பல ஆண்கள் திருமணம்ஹிமாசலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் ஹட்டி பழங்குடியினர், பல நூற்றாண்டுகளாக ‘பாலியாண்ட்ரி’ (Polyandry) எனப்படும் ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களைத் திருமணம் செய்யும் பழக்கத்தைப் பின்பற்றி வருகின்றனர்.
வெல்லம் திங்க ஒருத்தன் விரலை சூப்ப ஒருத்தன்..
இந்த மரபு, ‘ஜோடித்ரா’ என்று அழைக்கப்படுகிறது. இதன்படி, ஒரு குடும்பத்தின் நிலம் மற்றும் சொத்துக்கள் பிரிக்கப்படாமல் இருப்பதற்காக, ஒரு பெண் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களை மணக்கிறார்.
கஷ்டப்பட்டு சொத்து சேர்த்து ஒரு குடும்பம் வைத்திருக்கும். ஆனால், திருமணத்திற்கு பிறகு அந்த குடும்பத்தின் சொத்துக்கள் அண்ணன், தம்பி என பங்கு பங்காக பிரிக்கப்பட்டு உரு தெரியாமல் சென்று விடும். வெல்லம் திங்க ஒருத்தன்.. விரலை சூப்ப ஒருத்தன் என்ற சொலவடைக்கு ஏற்ப இந்த கூத்துகள் நாட்டில் அரங்கேறி வருவதை அன்றாட வாழ்வில் நாம் பார்த்து கடந்து வந்து கொண்டிருக்கிறோம்.
இமாச்சலப் பிரதேசத்தின் வருவாய் சட்டங்களும் இந்தப் பாரம்பரியத்தை அங்கீகரிக்கின்றன.சிர்மெளர் மாவட்டத்தில் உள்ள 450 கிராமங்களில் சுமார் 3 லட்சம் ஹட்டி இன மக்கள் வசிக்கின்றனர்.
இவர்கள் 2022-ல் மத்திய அரசால் பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes) பிரிவில் இணைக்கப்பட்டனர்.
கடந்த ஆறு ஆண்டுகளில், பாந்தனா கிராமத்தில் இதுபோன்ற ஐந்து ஜோடித்ரா திருமணங்கள் நடந்துள்ளன.
திருமண முடிவு:
முழு சம்மதத்துடன் எடுக்கப்பட்ட முடிவுமணமகளான சுனிதா செளஹான் மற்றும் மணமகன்களான பிரதீப் மற்றும் கபீல் நேகி ஆகிய மூவரும் இந்தத் திருமண முடிவை முழு சம்மதத்துடன் எடுத்ததாகக் கூறியுள்ளனர்.
பிரதீப், மத்திய அரசுத் துறையில் பணிபுரிபவர், “நாங்கள் எங்கள் பாரம்பரியத்தை பெருமையுடன் கடைபிடிக்கிறோம். இது எங்களின் கூட்டு முடிவு, இதில் எவ்வித அழுத்தமும் இல்லை” என்று தெரிவித்தார்.
வெளிநாட்டில் பணிபுரியும் கபீல் நேகி, “நான் வெளிநாட்டில் இருந்தாலும், குடும்பத்திற்கு என் ஆதரவை உறுதி செய்வேன். எங்கள் மனைவிக்கு நிலையான அன்பையும், வெளிப்படைத் தன்மையையும் வழங்குவோம்” என்று கூறினார்.
கல்வியறிவு மற்றும் பொருளாதார மாற்றத்தால் குறையும் பழக்கம்
ஹட்டி சமூகத்தில் இந்த ஜோடித்ரா பழக்கம் பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்தாலும், கல்வியறிவு மற்றும் பொருளாதார முன்னேற்றம் காரணமாக இந்த மரபு கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருவதாகத் தெரிகிறது.
இருப்பினும், இந்தத் திருமணங்கள் இப்பகுதியில் புனிதமானவையாகவும், சமூகத்தால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டவையாகவும் கருதப்படுகின்றன.
சமூக வலைதளங்களில் வைரலாகும் திருமண வீடியோ
இந்தத் திருமணம் கிராம மக்கள் முன்னிலையில் இசை மற்றும் கொண்டாட்டங்களுடன் நடைபெற்றது.
இதன் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பலரிடையே ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பாரம்பரியம், குடும்ப ஒற்றுமையையும், சொத்து பிரிவினையைத் தவிர்ப்பதற்காகவும் பின்பற்றப்படுவதாக சமூகத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந்தத் திருமணம், ஹட்டி பழங்குடியினரின் தனித்துவமான கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் உலகிற்கு எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

