Posts

Showing posts with the label Himachal Pradesh

வெல்லம் திங்க ஒருத்தன் விரலை சூப்ப ஒருத்தன்.. ஒரே பெண்ணை திருமணம் செய்த இருவர்.. பகீர் காரணம்..!

Image
ஹிமாசலப் பிரதேசத்தின் சிர்மெளர் மாவட்டத்திற்குட்பட்ட ஷில்லாய் பகுதியில் உள்ள பாந்தனா கிராமத்தில், ஹட்டி பழங்குடியினத்தைச் சேர்ந்த சுனிதா செளஹான் என்ற பெண், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பிரதீப் மற்றும் கபீல் நேகி ஆகிய இரு சகோதரர்களைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணம், ஹட்டி சமூகத்தின் நீண்டகால பாரம்பரியமான ‘ஜோடித்ரா’ முறைப்படி, கிராம மக்கள் முன்னிலையில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களுடன் கோலாகலமாக நடைபெற்றது. இந்தத் திருமணத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஜோடித்ரா பாரம்பரியம்: ஒரு பெண், பல ஆண்கள் திருமணம்ஹிமாசலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் ஹட்டி பழங்குடியினர், பல நூற்றாண்டுகளாக ‘பாலியாண்ட்ரி’ (Polyandry) எனப்படும் ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களைத் திருமணம் செய்யும் பழக்கத்தைப் பின்பற்றி வருகின்றனர். வெல்லம் திங்க ஒருத்தன் விரலை சூப்ப ஒருத்தன்.. இந்த மரபு, ‘ஜோடித்ரா’ என்று அழைக்கப்படுகிறது. இதன்படி, ஒரு குடும்பத்தின் நிலம் மற்றும் சொத்துக்கள் பிரிக்கப்படாமல் இருப்பதற்காக, ஒரு பெண் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ச...