திருப்பூரில் பிரபல யூடியூபர் 'டெக் சூப்பர் ஸ்டார்' சுதர்சன் மீது அவரது மனைவி விமலாதேவி வரதட்சணை கொடுமை புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மருத்துவரான விமலாதேவியை காதலித்து திருமணம் செய்த சுதர்சன், வீடு கட்ட கூடுதல் பணம் மற்றும் 20 பவுன் நகை கேட்டு மிரட்டியதாக புகார் கூறப்பட்டுள்ளது.

திருமணத்தின்போது 30 பவுன் நகை, 5 லட்சம் ரொக்கம், 2 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் சுதர்சனின் பெற்றோர் மாலதி, சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் மேலும் பணம் கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் விமலாதேவி தேனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து சுதர்சன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதேவேளையில், திருப்பூரில் இளம்பெண் ரிதன்யாவின் தற்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமான 78 நாட்களில் விஷம் குடித்து தற்கொலை செய்த ரிதன்யா, கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரால் வரதட்சணை கொடுமையால் உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாக வாட்ஸ்அப் ஆடியோவில் பதிவு செய்திருந்தார்.
300 பவுன் நகை, 70 லட்சம் மதிப்பிலான வால்வோ கார், 2.5 கோடி செலவில் திருமணம் நடத்தியும் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு நீதி கோரி ரிதன்யாவின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை விசாரணை நடத்தி கவின்குமார், அவரது பெற்றோரை கைது செய்துள்ளது.
இந்த இரு சம்பவங்களும் வரதட்சணை கொடுமையின் கொடூரத்தை வெளிப்படுத்தியுள்ளன.
Summary in English : Popular YouTuber 'Tech Super Star' Sudharsan faces dowry harassment allegations from his wife, Vimaladevi, a doctor, in Theni. She claims Sudharsan and his family demanded additional money and jewelry, leading to a police case. In Tiruppur, Rithanya’s suicide due to dowry harassment by her husband and in-laws shocked the nation.