Posts

Showing posts with the label Vimaladevi

வரதட்சனை கொடுமை.. சிக்கிய Tech Superstar சுதர்சன்.. மனைவி யாருன்னு தெரியுமா..?

Image
மதுரையைச் சேர்ந்த பிரபல யூடியூபர் சுதர்சன், முதலில் 'டெக் பாஸ்' என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வந்தார். பின்னர் 'டெக் சூப்பர்ஸ்டார்' என்ற பெயரில் புதிய சேனல் தொடங்கி, செல்போன், ஐபேட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் குறித்த விமர்சனங்களையும், புதிய தகவல்களையும் பகிர்ந்து வந்தார்.  இவரது வீடியோக்கள் மூலம் பிரபலமடைந்த சுதர்சன், மதுரையைச் சேர்ந்த முதன்மை ஆசிரியையான விமலாதேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்தின் போது 30 பவுன் நகை, ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், 'டெக் பாஸ்' சேனலில் இருந்து விலகிய பிறகு, 'டெக் சூப்பர்ஸ்டார்' சேனல் மூலம் போதிய வருமானம் இல்லாததால், சுதர்சன் கட்டி வந்த வீட்டின் பணி பாதியில் நின்றது.  இதனால், வீடு கட்டுவதற்காக கூடுதல் பணம் தேவைப்பட்டதாகவும், இதற்காக மனைவி விமலாதேவியிடம் வரதட்சணையாகப் பணம் கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது.  குறிப்பாக, விமலாதேவி கர்ப்பிணியாக இருந்தபோது, சுதர்சன் 10 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும், அவருடன்...

கர்ப்பமான மனைவி.. Tech SuperStar செய்த கொடுமை.. போலீசில் புகார்.. தீயாய் பரவும் வீடியோ!

Image
திருப்பூரில் பிரபல யூடியூபர் 'டெக் சூப்பர் ஸ்டார்' சுதர்சன் மீது அவரது மனைவி விமலாதேவி வரதட்சணை கொடுமை புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.  மருத்துவரான விமலாதேவியை காதலித்து திருமணம் செய்த சுதர்சன், வீடு கட்ட கூடுதல் பணம் மற்றும் 20 பவுன் நகை கேட்டு மிரட்டியதாக புகார் கூறப்பட்டுள்ளது.  திருமணத்தின்போது 30 பவுன் நகை, 5 லட்சம் ரொக்கம், 2 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் சுதர்சனின் பெற்றோர் மாலதி, சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் மேலும் பணம் கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் விமலாதேவி தேனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  இதையடுத்து சுதர்சன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதேவேளையில், திருப்பூரில் இளம்பெண் ரிதன்யாவின் தற்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருமணமான 78 நாட்களில் விஷம் குடித்து தற்கொலை செய்த ரிதன்யா, கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரால் வரதட்சணை கொடுமையால் உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாக வாட்ஸ்அப் ஆடியோவில்...