3500 கோடி.. எப்படி..? பிரபலத்துடன் தனிமையில் கையும் களவுமாக சிக்கிய நடிகை தமன்னா.. தலை சுத்தி கிடக்கும் ரசிகர்கள்..

ஆந்திர பிரதேசத்தில் 2019-2024 காலகட்டத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ரூ.3,500 கோடி மதுபான ஊழல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஊழலை அம்பலப்படுத்தி, எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யக் காரணமாக இருந்தவர் நடிகை ரம்பாவின் சகோதரர் வெங்கடேஸ்வர ஸ்ரீனிவாசராவ். இவர் உட்பட ஐ.ஏ.எஸ். அதிகாரி முகேஷ் குமார் மற்றும் பலர் இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக உள்ளனர்.

சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) தீவிர விசாரணை நடத்தி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் உட்பட 11 பேரை கைது செய்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் ரெட்டி மற்றும் அவரது உதவியாளர் வெங்கடேஷ் நாயுடு முக்கிய குற்றவாளிகளாக உள்ளனர்.

வெங்கடேஷ் நாயுடு கட்டுக்கட்டாக பணத்தை வைத்திருந்த வீடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், இந்த ஊழல் விவகாரத்தில் நடிகை தமன்னாவின் பெயரும் அடிபடுகிறது.

மோசடி பணத்தின் மூலம் தமன்னாவின் ‘ஒயிட் அண்ட் கோல்டு’ நிறுவனம் 300 கிலோ தங்கம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், வெங்கடேஷ் நாயுடுவுடன் தமன்னா தனி விமானத்தில் தனிமையின் பயணித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

இதனால், அவருக்கு ஊழல் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு, விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் திரைப்படத் துறையினர் சிக்கியது போல, தெலுங்கு சினிமாவிலும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை மேலும் தீவிரமடையும் பட்சத்தில், மேலும் பல அரசியல் பிரபலங்கள் மற்றும் திரைத் துறையினர் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary in English : The Rs 3,500 crore Andhra Pradesh liquor scam has implicated actress Tamannaah, with her ‘White and Gold’ company allegedly purchasing 300 kg of gold using illicit funds. Photos of her with accused Venkatesh Naidu went viral, prompting a notice for investigation.

The scandal, exposed by actress Rambha’s brother, involves YSR Congress leaders and officials.