ஆந்திர பிரதேசத்தில் 2019-2024 காலகட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின் கீழ் நடந்த ரூ.3,500 கோடி மதுபான ஊழல் விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஊழல் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மற்றும் அமலாக்கத்துறை (ED) விசாரணை நடத்தி வருகின்றன. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. செவிரெட்டி பாஸ்கர் ரெட்டியின் உதவியாளரான வெங்கடேஷ் நாயுடு முக்கிய குற்றவாளியாக (A-34) கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கட்டுக்கட்டாக பணத்தை எண்ணும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது, இதனால் விசாரணை மேலும் தீவிரமடைந்தது.
தமன்னாவின் பெயர் எப்படி இழுக்கப்பட்டது?
இந்த விவகாரத்தில் நடிகை தமன்னாவின் பெயர் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. வெங்கடேஷ் நாயுடுவுடன் தமன்னா தனி விமானத்தில் (private jet) அருகருகே நெருக்கமாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியுள்ளன.
இந்த புகைப்படங்கள் வெங்கடேஷ் நாயுடுவின் செல்போனில் இருந்து கிடைத்தவை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தமன்னாவின் ‘ஒயிட் அண்ட் கோல்டு’ நிறுவனம் ஊழல் பணத்தின் மூலம் 300 கிலோ தங்கம் வாங்கியதாக கூறப்படுகிறது,இது விசாரணையில் உள்ளது.
வெங்கடேஷ் நாயுடு யார்?
வெங்கடேஷ் நாயுடு, முன்னாள் எம்.எல்.ஏ. செவிரெட்டி பாஸ்கர் ரெட்டியின் நெருங்கிய உதவியாளராக கருதப்படுகிறார். இவர் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் அரசியல் பிரமுகர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோருடன் தொடர்பில் இருந்தவர்.

ஆடம்பர வாழ்க்கை முறை, தனி விமானப் பயணங்கள், உயர்ந்த வாகனங்கள் என அவரது வாழ்க்கை முறை அவரது வருமானத்திற்கு மீறியது என விசாரணையில் தெரியவந்துள்ளது.
2024 தேர்தலில் இவர் ஒங்கோல் தொகுதியில் டம்மி வேட்பாளராக நின்றதாகவும் தகவல் உள்ளது.
தமன்னா கைது?
வெங்கடேஷ் நாயுடுவுடன் தமன்னாவின் புகைப்படங்கள் வெளியானதால், அவருக்கு விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி விசாரணை ஆஜராகாத பட்சத்தில் தமன்னா மீது கைது நடவடிக்கையும் பாயும் என கூறப்படுகிறது.
இந்த புகைப்படங்கள் தமன்னாவுக்கும் வெங்கடேஷ் நாயுடுவுக்கும் இடையேயான உறவு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன.
.webp)
இருப்பினும், இந்த ஊழலில் தமன்னாவின் நேரடி பங்கு குறித்து உறுதியான ஆதாரங்கள் இதுவரை வெளியாகவில்லை. தமன்னாவின் நிறுவனத்தின் தங்க வாங்குதல் குறித்து விசாரணை நடந்து வருகிறது. அரசியல் பரபரப்புஇந்த விவகாரம் ஆந்திராவில் அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸும், தெலுங்கு தேசமும் (TDP) வெங்கடேஷ் நாயுடுவின் கட்சி தொடர்பு குறித்து ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். டி.டி.பி. தலைவர்களுடன் நாயுடுவின் புகைப்படங்கள் வெளியாகி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இதை “சதி” என குற்றம்சாட்டியுள்ளது.
இதனால், இந்த வழக்கு அரசியல் மற்றும் திரை உலகில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. தமன்னாவின் நிலைதமன்னா இதுவரை இந்த விவகாரம் குறித்து பகிரங்கமாக பதிலளிக்கவில்லை.
.jpg)
அவரது தனி விமான பயண புகைப்படங்கள் தொடர்பாக அவர் எவ்வாறு விளக்கம் அளிப்பார் என்பது ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன், இதேபோன்ற ஊழல் விவகாரங்களில் சிக்கிய திரைப் பிரபலங்களின் தொழில் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால், தமன்னாவின் அடுத்த நகர்வு முக்கியமாக கருதப்படுகிறது.
ஆந்திர மதுபான ஊழல் விவகாரத்தில் தமன்னாவின் பெயர் தற்போது சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளது. வெங்கடேஷ் நாயுடுவுடனான புகைப்படங்கள் மற்றும் ‘ஒயிட் அண்ட் கோல்டு’ நிறுவனத்தின் தங்க வாங்குதல் குறித்த குற்றச்சாட்டுகள் அவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளன.
.jpg)
ஆனால், இவை வெறும் குற்றச்சாட்டுகளாகவே உள்ளன, உறுதியான ஆதாரங்கள் இல்லை. மேலும் விசாரணையில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட பலர் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கு தெலுங்கு திரையுலகையும், ஆந்திர அரசியலையும் தொடர்ந்து உலுக்கி வருகிறது
Summary: The Rs 3,500 crore Andhra Pradesh liquor scam implicates actress Tamannaah, whose ‘White and Gold’ company allegedly bought 300 kg of gold with illicit funds. Viral photos show her with accused Venkatesh Naidu on a private jet. A notice has been issued for her questioning.

