டீல் பேசிய 'பாலியல் வக்கிர' பைக் டாக்ஸி ட்ரைவர்.. ஸ்மார்ட்டாக யோசித்து சோலியை முடித்த இளம்பெண்

சென்னை தேனாம்பேட்டை அருகே அண்ணா மேம்பாலத்தில், பைக் டாக்ஸி ஓட்டுநரான சதீஷ் குமார் (வயது 30) என்பவர், பயணியாக இருந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, தேனாம்பேட்டை காவல்துறையினர் சதீஷ் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் (வயது 28), சென்னை புரசைவாக்கத்தில் வசித்து, தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தினமும் பணிக்கு செல்வதற்காக உபர் (Uber) பைக் டாக்ஸி மூலம் பயணித்து வந்தார்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சதீஷ் குமார், தனியார் நிறுவனத்தில் சிவில் இன்ஜினியராக பணிபுரிந்து வருபவர். பணப்பற்றாக்குறையால், பகுதிநேர வேலையாக உபர் பைக் டாக்ஸி ஓட்டி வந்தார்.

கடந்த 20 நாட்களாக, சதீஷ் குமார் இளம்பெண்ணை காலை மற்றும் மாலை வேளைகளில் பணிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, அவரது பைக் டாக்ஸி சேவையை தினமும் பயன்படுத்துமாறு பரிந்துரைத்திருந்தார்.

இந்நிலையில், ஆகஸ்ட் 1, 2025 அன்று காலை, அண்ணா மேம்பாலத்தில் பயணிக்கும்போது, பின்னால் அமர்ந்திருந்த இளம்பெண்ணின் தொடையை சதீஷ் குமார் பாலியல் நோக்கில் தொட்டதாகவும், அவரது எதிர்ப்பையும் மீறி மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

பயணத்தை முடித்து இளம்பெண்ணை அலுவலகத்தில் இறக்கிவிட்டு, சதீஷ் குமார் அங்கிருந்து சென்றுவிட்டார்.இதையடுத்து, இளம்பெண் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

அவரது புகாரின் அடிப்படையில், தேனாம்பேட்டை காவல்துறையினர் சதீஷ் குமாரை கைது செய்தனர். அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சதீஷ் குமார், நாமக்கல் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வந்து பணிபுரிந்து வந்தவர் என்பதும், பணப்பற்றாக்குறை காரணமாக பைக் டாக்ஸி ஓட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம், பைக் டாக்ஸி சேவைகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், இதுபோன்ற சேவைகளை பயன்படுத்தும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

Summary :A Gujarat woman, working in Chennai, faced harassment from bike taxi driver Satheesh Kumar near Anna Flyover. The civil engineer from Namakkal was arrested by Thenampet police, charged under sections for harassment and cruelty against women, and is under investigation.