டீல் பேசிய 'பாலியல் வக்கிர' பைக் டாக்ஸி ட்ரைவர்.. ஸ்மார்ட்டாக யோசித்து சோலியை முடித்த இளம்பெண்
சென்னை தேனாம்பேட்டை அருகே அண்ணா மேம்பாலத்தில், பைக் டாக்ஸி ஓட்டுநரான சதீஷ் குமார் (வயது 30) என்பவர், பயணியாக இருந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தேனாம்பேட்டை காவல்துறையினர் சதீஷ் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் (வயது 28), சென்னை புரசைவாக்கத்தில் வசித்து, தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தினமும் பணிக்கு செல்வதற்காக உபர் (Uber) பைக் டாக்ஸி மூலம் பயணித்து வந்தார். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சதீஷ் குமார், தனியார் நிறுவனத்தில் சிவில் இன்ஜினியராக பணிபுரிந்து வருபவர். பணப்பற்றாக்குறையால், பகுதிநேர வேலையாக உபர் பைக் டாக்ஸி ஓட்டி வந்தார். கடந்த 20 நாட்களாக, சதீஷ் குமார் இளம்பெண்ணை காலை மற்றும் மாலை வேளைகளில் பணிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, அவரது பைக் டாக்ஸி சேவையை தினமும் பயன்படுத்துமாறு பரிந்துரைத்திருந்தார். இந்நிலையில், ஆகஸ்ட் 1, 2025 அன்று காலை, அண்ணா மேம்பாலத்தில...