உருளைகிழங்கு வறுவலுக்கு சைடிஸ் கஞ்சா சட்னி.. சுவைக்க கடல் போல குவிந்த மக்கள்.. இறுதியில் கடைக்காரருக்கு நேர்ந்த கொடுமை..

உத்தரப்பிரதேச மாநிலம், மோகன்லால் கஞ்ச் பகுதியில் பிரமோத் சாஹு (42) என்பவர் நடத்தி வந்த தள்ளுவண்டி உணவகத்தில் வறுத்த உருளைக்கிழங்கு (அலு டிக்கி) மற்றும் முட்டை போன்ற சாட் உணவுகளை விற்று வந்தார்.

மாலை 5 மணிக்கு திறக்கப்படும் இவரது கடை, இரவு 9 மணிக்குள் வியாபாரத்தை முடித்து விடுவார். இவரது கடையின் சட்னி, சுவைக்கு அடிமையாக்கும் வகையில் இருந்ததால், வாடிக்கையாளர்கள் கூட்டம் கூடியது.

"மோகன்லால் கஞ்ச் பகுதியே பிரமோதின் சட்னிக்கு அடிமை" என புகழப்பட்டது.ஆனால், சில வாடிக்கையாளர்களுக்கு சட்னியில் ஏதோ கலப்படம் இருப்பதாக சந்தேகம் எழுந்தது.

அடிக்கடி சிலர் உணவு வாங்காமல் கடைக்கு வந்து செல்வதும் உள்ளூர் மக்களின் கவனத்தை ஈர்த்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

ரகசியமாக பிரமோதின் நடவடிக்கைகளை கண்காணித்த போலீசார், அவரது சட்னியை ஆய்வு செய்து அதில் கஞ்சா கலக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். விசாரணையில், பிரமோத் ஆரம்பத்தில் தனது விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கஞ்சா கலந்த சட்னியை வழங்கியது தெரியவந்தது.

இதனால் கடைக்கு கூட்டம் அதிகரித்தது. மேலும், உருளைக்கிழங்கு கிரேவியிலும் கஞ்சா கலந்து வாடிக்கையாளர்களை ஈர்த்தார். தவிர, 500 முதல் 1200 ரூபாய் வரை விலையில் கஞ்சாவை சிறு பொட்டலங்களாக விற்று வந்தார்.

லக்னோ மோகன்லால் கஞ்ச் காவல் துறையினர், ஆகஸ்ட் 15, 2025 அன்று பிரமோதை கைது செய்து, அவரிடமிருந்து 1.25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக NDPS சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பிரமோத் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary : In Mohanlalganj, Uttar Pradesh, street vendor Pramod Sahu’s popular aloo tikki stall drew crowds for its addictive chutney, laced with cannabis.

After locals raised suspicions, police investigated, confirmed the cannabis mix, and arrested Pramod. He sold cannabis packets too, leading to his arrest and seizure of 1.25 kg cannabis.