Posts

Showing posts with the label aloo tikki

உருளைகிழங்கு வறுவலுக்கு சைடிஸ் கஞ்சா சட்னி.. சுவைக்க கடல் போல குவிந்த மக்கள்.. இறுதியில் கடைக்காரருக்கு நேர்ந்த கொடுமை..

Image
உத்தரப்பிரதேச மாநிலம், மோகன்லால் கஞ்ச் பகுதியில் பிரமோத் சாஹு (42) என்பவர் நடத்தி வந்த தள்ளுவண்டி உணவகத்தில் வறுத்த உருளைக்கிழங்கு (அலு டிக்கி) மற்றும் முட்டை போன்ற சாட் உணவுகளை விற்று வந்தார். மாலை 5 மணிக்கு திறக்கப்படும் இவரது கடை, இரவு 9 மணிக்குள் வியாபாரத்தை முடித்து விடுவார். இவரது கடையின் சட்னி, சுவைக்கு அடிமையாக்கும் வகையில் இருந்ததால், வாடிக்கையாளர்கள் கூட்டம் கூடியது. "மோகன்லால் கஞ்ச் பகுதியே பிரமோதின் சட்னிக்கு அடிமை" என புகழப்பட்டது.ஆனால், சில வாடிக்கையாளர்களுக்கு சட்னியில் ஏதோ கலப்படம் இருப்பதாக சந்தேகம் எழுந்தது. அடிக்கடி சிலர் உணவு வாங்காமல் கடைக்கு வந்து செல்வதும் உள்ளூர் மக்களின் கவனத்தை ஈர்த்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ரகசியமாக பிரமோதின் நடவடிக்கைகளை கண்காணித்த போலீசார், அவரது சட்னியை ஆய்வு செய்து அதில் கஞ்சா கலக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். விசாரணையில், பிரமோத் ஆரம்பத்தில் தனது விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கஞ்சா கலந்த சட்னியை வழங்கியது தெரியவந்தது. இதனால் கடைக்கு கூட்டம் அதிகரித்தது. மேலும், உருளைக்கிழங்கு கிரேவியிலும் கஞ...