சாலையோரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அதிவேகமாக வந்த கார் ஒன்றை மடக்கிப் பிடித்தனர். காரை ஓட்டி வந்தது ஒரு பெண்மணி. அந்த புகைப்படத்தை இங்கே பார்க்கிறீர்கள்.

எதற்காக காரை இவ்வளவு வேகமாக இயக்குகிறீர்கள் என்ற கேள்வியை காவல்துறையினர் எழுப்பினார்கள். அதேசமயம், இன்னும் சில காவல்துறை அதிகாரிகள் காரில் ஏதேனும் சட்டத்திற்கு புறம்பான விஷயங்கள் இருக்கிறதா ஏதேனும் கடத்தப்படுகிறதா என்ற கோணத்தில் காரை ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.

மறுபக்கம் காரை ஓட்டி வந்த பெண்மணியிடம் விசாரித்த போது. உடனிருக்கும் ஆண் என்னுடைய காதலன் என்றும் இருவரும் முதன்முறையாக டேட்டிங் செல்கிறோம் அதனால் ஒரு உணர்ச்சி வசத்தில் காரை வேகமாக இயக்கிவிட்டோம் தயவு செய்து மன்னித்து விடுங்கள் என்று கூறி காவல் துறையின் இடம் கெஞ்சி இருக்கிறார்கள்.

இதைக் கேட்ட காவல்துறையினர் முதல் டேட்டிங் ஆக இருந்தால் என்ன மெதுவாக காரை ஓட்டி கொண்டாடலாமே என்று அறிவுரை வழங்கி அந்த ஜோடியை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

அடுத்த சில நிமிடங்களில் காவல்துறையினரின் வாக்கிடாக்கி அழறுகிறது. வாக்கி டாக்கியில் வந்த தகவலின் பெயரில் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து செல்கிறார்கள் காவல்துறையினர். அங்கே அவர்கள் கண்ட காட்சி அவர்களை திகைக்க வைத்திருக்கிறது.

காரணம், சற்றுமுன் எங்களுடைய முதல் டேட்டிங் அதனால் காரை வேகமாக இருக்கும் மன்னித்து விடுங்கள் என்று கிளம்பிய அதே தம்பதி லாரி ஒன்றில் படு வேகமாக மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்கள்.முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் மீண்டும் காரை வேகமாக இயக்கியிருக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது.
இதையெல்லாம் தாண்டி அவர்களுக்கு ஏதோ ஒரு விபத்து நடக்கப் போகிறது என்பதை காவல்துறையினர் மூலம் இயற்கையான இந்த பிரபஞ்சம் அவர்களுக்கு முன்னறிவித்திருக்கிறது. ஆனால், அதை பற்றி அவர்கள் கவலை கொள்ளாமல் தொடர்ந்து காரை வேகமாக இயக்கி இப்படி ஒரு மிகப்பெரிய விபத்தில் சிக்கி தங்களுடைய உயிரை இழந்து இருக்கிறார்கள்.

அவர்களுடைய முதல் டேட்டிங் கடைசி டேட்டிங் ஆக மாறிப்போனது வேதனை.
Summary : A Tamil couple, on their first date, was stopped by Tamil Nadu police for speeding. Despite warnings, they continued driving fast and crashed into a lorry, dying instantly. The police had advised caution, but the couple ignored it, turning their first date into a tragic last.

