அந்த கோலத்தில் டீச்சரை பார்த்த மாணவன்.. வீட்டுக்குள் புகுந்து செய்த அசிங்கம்.. போலீஸையே நடுங்க வைத்த காட்சி!

மத்திய பிரதேசம், நரசிங்கப்பூர் மாவட்டத்தில் உள்ள கோத்வாலி பகுதியில் 26 வயது பள்ளி ஆசிரியை ஸ்மிருத்தி தீக்ஷித் மீது 18 வயது மாணவன் சூரியன்ஸ் கோச்சார் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு மாணவனின் ஒருதலை காதல் மற்றும் அதனால் ஏற்பட்ட ஆத்திரமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, ஸ்மிருத்தி தீக்ஷித் பணிபுரியும் தனியார் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

விழாவில் புடவை அணிந்து வந்தஆசிரியை ஸ்மிருத்தியைபார்த்த சூரியன்ஸ் கோச்சார், அவருடைய அழகை வர்ணித்து பேச ஆரம்பித்து ஒரு கட்டத்தில் அவரிடம் தகாத முறையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை, தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து, தலைமை ஆசிரியர் மாணவனை அழைத்து கண்டித்தார். இந்த சம்பவம் சூரியன்ஸ் கோச்சாரை ஆத்திரமூட்டியது. சம்பவத்தன்று, வழக்கம்போல் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து சோபாவில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்துள்ளார் ஆசிரியை ஸ்மிருத்தி தீக்ஷித்.

அப்போது உள்ளே சென்ற மாணவன், அந்த கோலத்தில் டீச்சரை பார்த்ததும்.. என்னை சிக்க வைத்து விட்டு.. இங்க ஜாலியா உக்காந்துட்டு இருக்கியா என கையில் வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை திறந்து ஆசிரியை மீது ஊற்றி அடுத்த நொடியே தீப்பெட்டியை எடுத்து தீ வைத்து விட்டு ஓடினான்.

ஆசிரியையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 25% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் ஆசிரியைக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில், சூரியன்ஸ் கோச்சார் முன்னர் ஸ்மிருத்தி பணிபுரியும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை பயின்றவன் என்பது தெரியவந்தது. அங்கு அவன் மீது ஒழுங்கீனமான நடவடிக்கைகள் தொடர்பாக பல புகார்கள் எழுந்ததால், பள்ளி நிர்வாகம் அவனுக்கு மாற்றுச் சான்றிதழ் (டிசி) வழங்கி வெளியேற்றியது.

அதன்பின் அவன் அரசு பள்ளியில் சேர்ந்து பிளஸ் 2 பயின்று வந்தான். ஆனால், ஆசிரியை ஸ்மிருத்தி மீது அவனுக்கு ஏற்பட்ட ஒருதலை காதல், பள்ளி மாறிய பின்னரும் தொடர்ந்து, அவர் மீது தவறான எண்ணத்தை வளர்த்து வந்ததாக தெரிகிறது.

ஆசிரியை ஸ்மிருத்தி, மாணவனின் காதல் முயற்சிகளை தொடர்ந்து நிராகரித்து, படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தி வந்தார். ஆனால், அவரது புகாரால் கண்டிக்கப்பட்ட ஆத்திரத்தில், இந்த கொடூர செயலை மாணவன் செய்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்கு பின்னர் தலைமறைவாக இருந்த சூரியன்ஸ் கோச்சாரை காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.இந்த சம்பவம் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் மனநிலை மற்றும் ஒழுக்கம் குறித்து முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

மாணவனின் இத்தகைய குரூர செயலுக்கு காரணமான மனநிலையை ஆராய்ந்து, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Summary: In Madhya Pradesh, an 18-year-old student, Suryansh Kochar, poured petrol and set fire to his 26-year-old former teacher, Smruti Dixit, over unrequited love. The attack followed a complaint against him for inappropriate behavior. Smruti, with 25% burns, is stable. Kochar was arrested.