கர்நாடக மாநிலம் ஹோலல்கிரே தாலுகாவை சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஜூலை 23-ஆம் தேதி ஹீரையூர் தாலுகாவில் உள்ள என்-48 தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்தில் சிக்கினார்.
.png)
இதில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், தாவங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து செய்தியை அறிந்த அவரது குடும்பத்தினர் பதறி அடித்து மருத்துவமனைக்கு விரைந்தனர்.
காயம் காரணமாக அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதால், மருத்தர்கள் இரத்த பரிசோதனை நடத்தினர், அப்போது அவருக்கு HIV தொற்று உள்ளது தெரியவந்தது.இதை அறிந்த மருத்தர்கள், இளைஞரின் சகோதரி நிஷாவிடம் தகவல் தெரிவித்து, மேலும் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதை அடுத்து, கடந்த ஜூலை 25-ஆம் தேதி நிஷாவும் அவரது கணவர் மஞ்சுநாத்தும், தனியார் வாகனத்தில் இளைஞரை மணிப்பால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.ஆனால், மறுநாள் அவரது உடலை சொந்த கிராமமான டம்மி கிராமத்திற்கு எடுத்துச் சென்று, இறந்ததாக கூறி இறுதி சடங்குகளுக்கு ஏற்பாடு செய்தனர். ஆனால், உறவினர்கள் இளைஞனின் கழுத்தில் காயத்தை கண்டு சந்தேகம் அடைந்தனர்.
.jpg)
இதை அடுத்து நிஷா, தனது தந்தையை தனியாக அழைத்துச் சென்று, தம்பியை தாங்களே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அதிர்ச்சி அடைந்த தந்தை, இதுகுறித்து ஹோலல்கிரே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில், நிஷா தனது தம்பியின் HIV தொற்று வெளியே தெரிந்தால் குடும்ப மானம் போய்விடும் என்று பயந்ததாகவும், தாய்-தந்தையின் உடல்நலம் கருதி அவர்களுக்கு HIV பரவலாம் என்ற அச்சத்தில், கணவர் மஞ்சுநாத்துடன் சேர்ந்து போர்வையால் கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும் கூறினார்.
.jpg)
மாறாக, நிஷாவின் தந்தை, மகள் மற்றும் மருமகன் சொத்துக்காகவே மகனை கொலை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.போலீஸார் நிஷாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், ஆனால் மஞ்சுநாத் தலைமறைவாக உள்ளதால் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் HIV தொடர்பான பாரபட்சமும், குடும்ப மானத்துக்காக அருவருப்பான குற்றமும் நடைபெறுவதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. போலீஸார் வழக்கை ஆழமாக விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary : A 23-year-old man from Holalkere, Karnataka, working in a private firm, was injured in a road accident on July 23. Hospital tests revealed he had HIV.
His sister Nisha and husband Manjunath took him to Manipal Hospital but allegedly killed him with a cloth, fearing family honor and HIV spread. Nisha confessed to her father, who reported to police. Nisha is arrested, Manjunath is absconding, and police are investigating.


