OYO அறையில் 17 முறை.. வலியில் துடித்த காதலி.. கதவை தெரிந்த போது படுக்கை முழுதும் இரத்தம்.. காதலன் வெறிச்செயல்.. பகீர் காட்சிகள்..

கர்நாடக தலைநகர் பெங்களூருவில், கெங்கேரி பகுதியில் உள்ள OYO ஹோட்டல் ஒன்றில் 33 வயது பெண்ணான ஹரிணி, தனது காதலனால் 17 முறை கத்தியால் குத்தி பயங்கரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கெங்கேரி அருகே வசித்து வந்த ஹரிணிக்கு தாசே கவுடா என்ற கணவரும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவரது வாழ்க்கை சுமுகமாக சென்று கொண்டிருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் கெங்கேரியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில், தலகட்டாபுராவைச் சேர்ந்த 25 வயது இளைஞரான யசஷ் என்பவருடன் மூன்றாவது நபர் மூலம் அறிமுகம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு, நண்பர்களாக பேசி வந்தனர். இந்த நட்பு பின்னர் காதலாக உருவெடுத்தது. யசஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இருவரும் OYO ஹோட்டல்களில் அறைகள் முன்பதிவு செய்து அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், ஹரிணியின் கணவருக்கு இந்த உறவு குறித்து தெரியவந்ததால், அவர் ஹரிணியை கடுமையாக கண்டித்து, அவரது செல்போனை பறித்து வைத்திருந்தார்.

இதனால், யசஷால் ஹரிணியை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. பின்னர், ஹரிணி தனது கணவரிடம் மன்னிப்பு கேட்டு, யசஷுடன் பேசுவதை நிறுத்துவதாக உறுதியளித்ததை அடுத்து, அவருக்கு மீண்டும் செல்போன் வழங்கப்பட்டது.

இருப்பினும், ஹரிணி யசஷுடன் தொடர்பை முறித்துக்கொள்ள முடியாமல், மீண்டும் செல்போனில் பேசியதாக தெரிகிறது.இதனைத் தொடர்ந்து, ஜூன் 6, 2025 அன்று, கெங்கேரி அருகே பூர்ண பிரஜா லேஅவுட்டில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இருவரும் சந்திக்க முடிவு செய்தனர். யசஷ் அந்த ஹோட்டலில் அறை முன்பதிவு செய்திருந்தார்.

சம்பவத்தன்று, இருவரும் ஹோட்டலுக்கு சென்று உல்லாசமாக இருந்தபோது, ஹரிணி இந்த உறவை முடித்துக்கொள்வது குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாத யசஷ், ஹரிணியுடன் கடுமையாக வாக்குவாதம் செய்தார்.

ஆத்திரத்தில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஹரிணியை 17 முறை குத்தி கொலை செய்தார். இதில், ஹரிணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கொலைக்குப் பிறகு, யசஷ் ஹோட்டலில் இருந்து தப்பியோடிவிட்டார்.

முன்பதிவு செய்யப்பட்ட அறை நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் கதவைத் திறந்து பார்த்தபோது, படுக்கை முழுதும் இரத்தம் தெறித்த நிலையில் ஆடையின்றி அலங்கோலமாக ஹரிணி இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஹோட்டல் நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஹரிணியின் உடலை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், யசஷ் இந்தக் கொலையை செய்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த போலீசார், யசஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம், பெங்களூரு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. OYO ஹோட்டல்களில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

இந்த கொலை வழக்கு குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது, மேலும் யசஷின் மனநிலை மற்றும் இந்தக் கொலைக்கு வழிவகுத்த சம்பவங்களின் பின்னணி குறித்து போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். 

Summary : In Bengaluru, Harini, a 33-year-old married woman, was brutally stabbed 17 times and killed by her lover, Yashas, in an OYO hotel. Their affair, sparked at a temple festival, led to a fatal argument when Harini wanted to end it. Yashas was arrested.