OYO அறையில் 17 முறை.. வலியில் துடித்த காதலி.. கதவை தெரிந்த போது படுக்கை முழுதும் இரத்தம்.. காதலன் வெறிச்செயல்.. பகீர் காட்சிகள்..
கர்நாடக தலைநகர் பெங்களூருவில், கெங்கேரி பகுதியில் உள்ள OYO ஹோட்டல் ஒன்றில் 33 வயது பெண்ணான ஹரிணி, தனது காதலனால் 17 முறை கத்தியால் குத்தி பயங்கரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கெங்கேரி அருகே வசித்து வந்த ஹரிணிக்கு தாசே கவுடா என்ற கணவரும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவரது வாழ்க்கை சுமுகமாக சென்று கொண்டிருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் கெங்கேரியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில், தலகட்டாபுராவைச் சேர்ந்த 25 வயது இளைஞரான யசஷ் என்பவருடன் மூன்றாவது நபர் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு, நண்பர்களாக பேசி வந்தனர். இந்த நட்பு பின்னர் காதலாக உருவெடுத்தது. யசஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இருவரும் OYO ஹோட்டல்களில் அறைகள் முன்பதிவு செய்து அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், ஹரிணியின் கணவருக்கு இந்த உறவு குறித்து தெரியவந்ததால், அவர் ஹரிணியை கடுமையாக கண்டித்து, அவரது செல்போனை பறித்து வைத்திருந்தார். இதனால், யசஷால் ஹரிணியை தொடர்பு கொள்ள முடியாமல் போனது....