பிரபல தொகுப்பாளினி விஜே மணிமேகலை, ஜீ தமிழில் புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக அறிவித்து ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு ‘குக் வித் கோமாளி’ சீசன் 5-ல் பிரியங்காவுடனான கருத்து வேறுபாடு காரணமாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய மணிமேகலை, பின்னர் ஜீ தமிழின் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி பாராட்டுகளைப் பெற்றார்.

சமீபத்திய பேட்டியில் மணிமேகலை கூறுகையில், “ஜீ தமிழில் முதல் முறையாக பணியாற்றுவது குறித்து முதலில் யோசித்தேன். ஆனால், ஒரு சண்டைக்குப் பின் வந்த வாய்ப்பு நல்லதாக இருக்கும் என்று உள்மனது கூறியது.
என் உள்ளுணர்வைப் பின்பற்றி முடிவெடுத்தேன். ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ அனுபவம் ஆறு மாதங்களாக சுதந்திரமாகவும், முழு ஈடுபாட்டுடனும் இருந்தது,” என்றார்.
பிரியங்காவுடனான மோதல் மற்றும் அவருடன் மீண்டும் பேசுவது குறித்த வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, “அதற்கான அவசியம் ஏற்படவில்லை. அது எனக்கு முடிந்து போன அத்தியாயம்,” என்று காட்டமாக தெரிவித்தார்.
மணிமேகலையின் இந்த புதிய தொடக்கம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary : VJ Manimegalai, a popular TV host, announced she will host a new show on Zee Tamil. After exiting Cooku with Comali Season 5 due to a fallout with Priyanka, she joined Dance Jodi Dance. In a recent interview, she shared, “I followed my instincts joining Zee Tamil. The DJD experience was liberating. Priyanka? That chapter’s closed.”

