மராட்டிய மாநிலம், நாந்தெட் மாவட்டத்தில் உள்ள கக்ராலா பகுதியில் உள்ள கிணற்றில் இரண்டு சடலங்கள் மிதப்பதாக கிடைத்த தகவலையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலங்களை மீட்டனர்.
மீட்கப்பட்ட சடலங்கள் போர்ஜூனி கிராமத்தைச் சேர்ந்த 20 வயது சஞ்சீவாணி மற்றும் லகான் பண்டோரா என அடையாளம் காணப்பட்டனர். இந்த கொலை சம்பவத்தில் மரோட்டி சுரேன், மாதவ சுரேன் மற்றும் லட்சுமண சுரேன் ஆகிய மூவர் காவல் நிலையத்தில் சரணடைந்து, தாங்கள் இந்தக் கொலையை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

விசாரணையில், சஞ்சீவாணிக்கு கடந்த ஆண்டு திருமணமாகி, கணவருடன் கோரேகாவ் கிராமத்தில் வசித்து வந்ததாகவும், ஆனால் திருமணத்திற்கு முன்பிருந்தே லகான் பண்டோராவுடன் காதலில் இருந்ததாகவும் தெரியவந்தது.
சஞ்சீவாணியின் குடும்பத்தினர் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்தனர். இருப்பினும், சஞ்சீவாணியும் லகானும் தங்களது காதலை தொடர்ந்தனர். அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த இவர்கள், சஞ்சீவாணியின் மாமியார் வீட்டிற்கு லகான் சென்று சந்திப்பதையும் வழக்கமாக்கி இருந்தனர்.
இந்நிலையில், சஞ்சீவாணியின் மாமியார் இவர்களது உறவை கண்டறிந்து, கண்காணிக்கத் தொடங்கினார். சம்பவத்தன்று, மருமகள் சஞ்சீவாணி தன்னுடைய படுக்கையறையில் கள்ள காதலன் லகானுடன் பொட்டுத்துணி இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மகன் வேலைக்கு சென்று விட்ட நிலையில், புகுந்த வீட்டிலேயே கள்ள காதலனுடன் உல்லாசமாக இருந்த சஞ்சீவாணியின் இந்த செயல் மாமியாரை கொத்திப்படைய செய்தது.
இதனை தனது செல் போனில் கையும் களவுமாக படம் பிடித்த மாமியார், உடனடியாக சஞ்சீவாணியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இதனால் கோபமடைந்த சஞ்சீவாணியின் தந்தை மரோட்டி சுரேன், தாத்தா லட்சுமண சுரேன் மற்றும் மாமா மாதவ சுரேன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
வந்தவர்கள் சஞ்சீவாணியின் உடல் சிவக்கும் அளவுக்கு அடி வெளுத்தனர். இனிமேல் இது போல நடக்காது என மாமியாரிடம் அழுதனர். ஆனால், “இந்தப் பெண் இனி எங்களுக்கு தேவையில்லை, உங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்” என மாமியார் கூறியது, மூவரின் ஆத்திரத்தை மேலும் தூண்டியது.
கோபத்தில் கொதித்த மூவரும் சஞ்சீவாணி மற்றும் லகான் ஆகியோரை கொடும் வெறியில் சரமாரியாக தாக்கி, பின்னர் அடித்தே கொலை செய்தனர்.
பின்னர், இருவரின் கை-கால்களையும் கட்டி, கக்ராலா பகுதியில் உள்ள கிணற்றில் வீசியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து லகானின் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டபோதும், அவர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் கொலை நடந்து முடிந்துவிட்டது.
போலீசார் இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து, மரோட்டி சுரேன், மாதவ சுரேன் மற்றும் லட்சுமண சுரேன் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டையேஅதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
கள்ளக்காதலாக இருந்தாலும், அவனை தன்னுடைய புகுந்த வீட்டுக்கே வரவழைத்து உல்லாசம் கண்ட சஞ்சீவாணி பற்றி உங்களுடைய கருத்து என்ன..? என்பதை கமெண்ட் செக்ஷனில் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
Summary : In Nanded, Maharashtra, two bodies were found in a well in Kakrala. Police identified them as Sanjeevani and Lagan Pandura, lovers killed by Sanjeevani’s father, grandfather, and uncle after their affair was discovered. The trio confessed, was arrested, and jailed.

