‘உடம்பில் பொட்டு துணி இல்லாமல் மருமகள்’ உடன் இருந்த நபரை கண்டு கதிகலங்கிய மாமியார்.. நாட்டையே உலுக்கிய கோர சம்பவம்!
மராட்டிய மாநிலம், நாந்தெட் மாவட்டத்தில் உள்ள கக்ராலா பகுதியில் உள்ள கிணற்றில் இரண்டு சடலங்கள் மிதப்பதாக கிடைத்த தகவலையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலங்களை மீட்டனர். மீட்கப்பட்ட சடலங்கள் போர்ஜூனி கிராமத்தைச் சேர்ந்த 20 வயது சஞ்சீவாணி மற்றும் லகான் பண்டோரா என அடையாளம் காணப்பட்டனர். இந்த கொலை சம்பவத்தில் மரோட்டி சுரேன், மாதவ சுரேன் மற்றும் லட்சுமண சுரேன் ஆகிய மூவர் காவல் நிலையத்தில் சரணடைந்து, தாங்கள் இந்தக் கொலையை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். விசாரணையில், சஞ்சீவாணிக்கு கடந்த ஆண்டு திருமணமாகி, கணவருடன் கோரேகாவ் கிராமத்தில் வசித்து வந்ததாகவும், ஆனால் திருமணத்திற்கு முன்பிருந்தே லகான் பண்டோராவுடன் காதலில் இருந்ததாகவும் தெரியவந்தது. சஞ்சீவாணியின் குடும்பத்தினர் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்தனர். இருப்பினும், சஞ்சீவாணியும் லகானும் தங்களது காதலை தொடர்ந்தனர். அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த இவர்கள், சஞ்சீவாணியின் மாமியார் வீட்டிற்கு லகான் சென்று சந்திப்பதையும் வழக்கமாக்கி இருந்தனர். இந்நிலையில், சஞ்சீவாணியின் மாமியார்...