என் புருஷன் கிளம்பிட்டான்.. சீக்கிரமா வாடா.. திருட்டு புருஷனுக்காக மனைவி தீட்டிய திட்டம்.. சினிமாவை மிஞ்சும் கொடூர சம்பவம்..

சேலம் ஏற்காட்டில் எலக்ட்ரீசியன் சிவகுமார் (36) தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில், அவரது மனைவி மாராயி (26), லாரி டிரைவர் சந்தோஷ் (21) மற்றும் அவரது நண்பர் அண்ணாமலை (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மற்றொரு குற்றவாளியான தினேஷ் (22) தலைமறைவாக உள்ளதாகவும், அவரைத் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.சிவகுமார் மற்றும் மாராயிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில், லாரி டிரைவர் சந்தோஷ் அடிக்கடி சிவகுமார் வீட்டிற்கு வந்து, குழந்தைகளுக்கு நொறுக்குத்தீனி, பழங்கள் வாங்கி வந்து குடும்பத்துடன் நெருக்கமானார். ஆரம்பத்தில் மாராயியுடன் நட்பாக பழகிய சந்தோஷ், பின்னர் அவருடன் கள்ளத்தொடர்பு ஏற்படுத்தினார்.

சிவகுமார் வீட்டில் இல்லாத நேரத்தில், சந்தோஷ் மாராயியுடன் உல்லாசமாக இருந்ததை அக்கம்பக்கத்தினர் சிவகுமாரிடம் தெரிவித்தனர். ஆரம்பத்தில் இதை நம்ப மறுத்த சிவகுமார், மனைவியின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கத் தொடங்கினார்.

ஒரு கட்டத்தில், சந்தோஷும் மாராயியும் நெருக்கமாக இருப்பதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த சிவகுமார், இருவரையும் கண்டித்தார்.இருப்பினும், சில மாதங்கள் அமைதியாக இருந்த மாராயியும் சந்தோஷும் மீண்டும் தங்கள் கள்ள உறவைத் தொடர்ந்தனர்.

இதனால் சிவகுமாருக்கும் மாராயிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கணவனின் இருப்பு தங்கள் உறவுக்கு இடையூறாக இருப்பதாகக் கருதிய மாராயி, சந்தோஷுடன் இணைந்து சிவகுமாரைக் கொலை செய்ய திட்டமிட்டார்.

இதற்காக 50,000 ரூபாய் கூலி பேசி, சிவகுமாரை கார் விபத்தில் இறந்தது போல காட்ட முயற்சித்தனர். அதன் படி, தன்னுடைய கணவர் சிவக்குமார் எப்போது தனியாக இருப்பார் என்பதை கூலிப்படைக்கு தெரிவித்தார் மாராயி. அதன் படி, சிவக்குமார் மளிகை கடைக்கு கிளம்பியதும்.. 

கள்ள காதலனை சந்தோஷை தொலைபேசியில் அழைத்த மாராயி.. என் புருஷன்.. கிளம்பிட்டான்.. சீக்கிரமா வாடா.. என்று கூறு தனது நண்பர்களான அண்ணாமலை மற்றும் தினேஷுடன் சேர்ந்து சிவகுமாரை காரை விட்டு மோதி தலையில் பலமாக தாக்கி கொலை செய்து.. விபத்தில் இறந்தது போல பக்காவா செட்டிங் செய்தான் சந்தோஷ்.

பிரேத பரிசோதனை அறிக்கையில், சிவகுமார் விபத்தில் இறக்கவில்லை என்றும், தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களால் உயிரிழந்தார் என்றும் தெரியவந்தது.

இதையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், மாராயி, சந்தோஷ் மற்றும் அண்ணாமலையை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தினேஷை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.இந்த சம்பவம் ஏற்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary : In Yercaud, Salem, electrician Sivakumar was found dead with head injuries. His wife Marayi and her lover, lorry driver Santhosh, along with accomplice Annamalai, were arrested for his murder. They planned to kill Sivakumar, who opposed their affair. Another suspect, Dinesh, remains absconding.