வீட்டில் பிணமாக கிடந்த சிறுமி.. உள்ளாடையில் இருந்த காய்ந்த விந்து.. விசாரணையில் குலை நடுங்க வைக்கும் தகவல்!

United States : 1996, டிசம்பர் 26, US-ன் கொலராடோவின் போல்டர் நகரம். காலை 5:52 மணி. பேட்ஸி ராம்சே தன் ஆறு வயது மகள் ஜோன்பெனெட் காணாமல் போனதாக கதறி அழுதபடி போலீசுக்கு அழைக்கிறார். வீட்டின் பின்பக்க படிக்கட்டில் ஒரு மிரட்டல் கடிதம் கிடைக்கிறது.

அதில், ஜோன்பெனெட் கடத்தப்பட்டதாகவும், $118,000 தராவிட்டால் அவளுக்கு ஆபத்து என்றும் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், அதே நாள், எட்டு மணி நேரத்திற்குள், ராம்சே வீட்டின் அடித்தளத்தில், ஒரு யூட்டிலிட்டி அறையில் ஜோன்பெனெட்டின் உடல் கண்டுபிடிக்கப்படுகிறது.

ஜோன்பெனெட் ஒரு சிறு வயது அழகி. ஆறு வயதில் ஐந்து அழகி போட்டிகளில் வென்றவள். ஆனால், இப்போது அவள் உயிருடன் இல்லை. அவளது வாயில் டேப் ஒட்டப்பட்டு, கழுத்தில் மெல்லிய கயிறு இறுக்கப்பட்டிருக்கிறது.

மரணத்திற்கு காரணம்? தலையில் பலமான அடி மற்றும் கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சுத்திணறல். ஆச்சரியமூட்டும் விஷயம்? கழுத்தை நெரிக்க பயன்படுத்தப்பட்டது ஜோன்பெனெட்டின் ஓவியக் கருவிகளில் இருந்த பெயிண்ட் பிரஷின் கைப்பிடி.

வீட்டில் கிடைத்த மிரட்டல் கடிதம் மர்மத்தை மேலும் ஆழப்படுத்துகிறது. $118,000 என்ற தொகை ஜோன்பெனெட்டின் தந்தை ஜான் ராம்சேயின் அந்த ஆண்டு போனஸ் தொகையை ஒத்திருக்கிறது. கடிதம் வீட்டிலிருந்த பேப்பர் மற்றும் பேனாவில் எழுதப்பட்டிருக்கிறது.

ஒரு கொலையாளி வீட்டிற்குள் நுழைந்து, கடிதம் எழுதி, பின் கொலை செய்திருப்பானா? கடிதத்தில் எழுத்துப்பிழைகள் இருந்தாலும், சில கடினமான வார்த்தைகள் சரியாக எழுதப்பட்டிருக்கின்றன. இது ஒரு போலி கடிதமாக இருக்கலாமா?குற்றவாளி யார்?

முதலில் சந்தேகம் ராம்சே குடும்பத்தின் மீது விழுந்தது. பேட்ஸி ராம்சே மீது சந்தேகம் எழுந்தது; கடிதத்தை அவர் எழுதியிருக்கலாம் என்று ஊகிக்கப்பட்டது.

ஆனால், கையெழுத்து பகுப்பாய்வில் பேட்ஸியை உறுதியாக குற்றவாளியாக்க முடியவில்லை. ஜோன்பெனெட்டின் ஒன்பது வயது அண்ணன் பர்கே மீதும் சந்தேகம் எழுந்தது, ஆனால் ஆதாரங்கள் அவனை குற்றமற்றவனாக்கின.

2008இல், ஜோன்பெனெட்டின் உள்ளாடையில் காய்ந்த நிலையில் கிடைத்த ஒரு விந்தணு மாதிரியில் இருந்து பெறப்பட்ட DNA ஆதாரம் ராம்சே குடும்பத்தை முழுமையாக விடுவித்தது.

வெளியாட்களில் மூன்று பேர் மீது சந்தேகம் விழுந்தது. முதலாமவர், பில் மெக்ரேனால்ட்ஸ், ஒரு உள்ளூர் சாண்டா கிளாஸ். அவர் கொலைக்கு இரண்டு நாட்களுக்கு முன் ராம்சே வீட்டிற்கு வந்திருந்தார்.

அவரது மகளும் 22 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். அவரது மனைவி எழுதிய ஒரு கதையில், ஒரு குழந்தை அடித்தளத்தில் கொலை செய்யப்படும் காட்சி இருந்தது. ஆனால், அவருக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் இல்லை.

அடுத்தவர், கேரி ஒலிவா, ராம்சே வீட்டுக்கு அருகில் வசித்தவர். 2016இல் சைல்டு போர்னோகிராஃபி வழக்கில் கைதானவர். அவரது பையில் ஜோன்பெனெட்டின் புகைப்படம் இருந்தது.

அவரது நண்பர் ஒருவர், ஒலிவா கொலைக்கு அடுத்த நாள் “நான் ஒரு சிறுமியை காயப்படுத்திவிட்டேன்” என்று கூறியதாக போலீசுக்கு தெரிவித்தார். ஆனால், ஒலிவாவின் DNAவும் மேட்ச் ஆகவில்லை.

கடைசியாக, ஜான் மார்க் கார். 2006இல், அவர் ஒரு பத்திரிகையாளருக்கு மின்னஞ்சல் அனுப்பி, “நான் தான் ஜோன்பெனெட்டை கொன்றேன்” என்று ஒப்புக்கொண்டார்.

ஆனால், விசாரணையில் அவர் கொலை நடந்தபோது கொலராடோவில் இல்லை, ஜார்ஜியாவில் இருந்தார். அவரது DNA-வும் மேட்ச் ஆகவில்லை. அவர் புகழுக்காக இவ்வாறு செய்ததாக ஒப்புக்கொண்டார்.

இந்த வழக்கின் மையத்தில் இருப்பது ஜோன்பெனெட்டின் உள்ளாடையில் கிடைத்த DNA. ஆனால், DNA நிபுணர் டாக்டர் ஹென்றி லீ, அந்த DNA உள்ளாடை தயாரிக்கப்பட்டபோதே வந்திருக்கலாம் என்று கூறுகிறார். கொலை செய்யப்பட்ட அன்றுஜோன்பெனெட் புதிய உள்ளாடையை அணிந்திருந்தாள்.

உள்ளாடை தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்பவரின் விந்தணுவாக இது இருக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே, வேறு ஒரு வழக்கில் இதை நான் உறுதி படுத்தியுள்ளேன். அதனால், இதுவும் அது போல இருக்க வாய்ப்புள்ளது என குலை நடுங்க வைத்தார்.

இது வழக்கை மேலும் சிக்கலாக்கியது. வீட்டிற்கு வெளியே பனியில் காலடி தடங்கள் இல்லை, கதவு உடைக்கப்பட்டதற்கான அறிகுறியும் இல்லை. இரண்டு செட் அந்நிய காலடி தடங்கள் மற்றும் ஒரு கயிறு வீட்டில் கிடைத்தாலும், அவை 2006 வரை பரிசோதிக்கப்படவில்லை.

2025ஆம் ஆண்டு இன்று வரை, இந்த வழக்கு தீர்க்கப்படவில்லை. ஜோன்பெனெட்டின் மரணத்திற்கு நீதி கிடைக்கவில்லை. இது ஒரு குடும்பத்தின் உள் தவறா? அல்லது அந்நியனின் கொடூர செயலா? மிரட்டல் கடிதம், DNA, காலடி தடங்கள்—எல்லாமே ஒரு முடிவில்லாத புதிராக உள்ளன.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்த மர்மத்தின் குற்றவாளி யாராக இருக்கலாம்?

Summary : In 1996, six-year-old beauty queen JonBenét Ramsey was found strangled and bludgeoned in her Boulder, Colorado home hours after a $118,000 ransom note.

No forced entry, unknown male DNA on her underwear, and cleared family suspects amid handwriting suspicions. Despite leads like McReynolds and Oliva, the case remains unsolved as of 2025.