குவைத் நகரத்தின் சூரிய வெப்பத்தால் வியர்த்துக்கொண்டிருந்த வெங்கடேசன், தன் குடும்பத்திற்காக உழைத்து சம்பாதித்த பணத்தை அனுப்பி வைத்துக்கொண்டிருந்தான்.
நாகை மாவட்டம், திட்டச்சேரி அருகே பாக் கொந்தகை கிராமத்தில் வாழும் அவன் மனைவி ஜெயமாலாவிடம், கடந்த சில ஆண்டுகளாக 40 லட்சம் ரூபாய் வரை அனுப்பியிருந்தான். "இதை சேமித்து வை, குழந்தைகளுக்காக," என்று அவன் எப்போதும் கூறுவான்.
ஆனால், ஜெயமாலா அந்தப் பணத்தை தன் பெரியம்மா மகன் கலைச்செல்வனிடம் கொடுத்து, வட்டித் தொழிலில் முதலீடு செய்திருந்தாள்.
அந்த முதலீடுகள் தோல்வியடைந்தன. பணம் முற்றிலும் போய்விட்டது. பணத்தை வாங்கிய பலரும் வாங்குன காசுக்கு மேல பணம் கொடுத்துட்டோம் என கம்பி நீட்டினர்.
புதுவை சேர்ந்த 37 வயது கலைச்செல்வன், அண்ணன்-தங்கை உறவு என்றாலும், இருவரும் கள்ளக்காதலில் திளைக்கிறார்கள். அதிக அளவில் பணம் செலவு செய்து கொண்டு உல்லாச பறவைகளை சுற்றி வருகிறார்கள் என ஊர் பேசியது.
ஊருக்கு விடுமுறைக்கு வந்த வெங்கடேசன், மனைவியிடம் கணக்கு கேட்டான். "எங்கே போச்சு நம்ம பணம்?" என்று கேள்வி எழுந்தது. ஜெயமாலா மௌனமாக இருந்தாள். வாக்குவாதம் சண்டையாக மாறியது.
மொட்டை வெயிலில், ரத்தத்தை வியர்வையாக சிந்தி, வித்தை கட்டி, வாயை கட்டி சேர்த்து வைத்த பணம்.. சப்பாத்திக்கு சால்னா இல்லாமல் வெறும் தண்ணீரில் சப்பாத்தியை தொட்டு சாப்பிட்டு ஒப்பேத்திய நாட்கள் எல்லாம் வெங்கடேசனின் நினைவில் வந்தது.
இப்படி, சிறுக சிறுக சேர்த்து வைத்த பணம்.. விலாசம் தெரியாமல் சிதறிவிட்டதே என குடும்பத்தில் பிளவு விழுந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், ஜூலை 4-ஆம் தேதி, ஜெயமாலா தன் இரு குழந்தைகளான 9 வயது அர்ஷினி தர்ஷினி மற்றும் 3 வயது வர்ஷினியுடன் திடீரென மாயமானாள்.
செல்போன் ஸ்விட்ச் ஆஃப். வெங்கடேசன் திட்டச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். "மனைவியும் குழந்தைகளும் காணாமல் போய்விட்டார்கள்," என்று. போலீஸார் தேடத் தொடங்கினர். ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.
அந்த நேரத்தில், ஆந்திராவின் திருப்பதி மாவட்டம், பாகலா மண்டலத்தில் உள்ள மூலவங்கா வனப்பகுதி. அங்கு காட்டின் அமைதியை உடைத்து, கடந்த 14-ஆம் தேதி, ஆடு-மாடு மேய்த்து வந்தவர்கள் அதிர்ச்சியான காட்சியைப் பார்த்தனர். மரக்கிளையில் தொங்கும் ஒரு ஆணின் உடல். அவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த பாகலா போலீசுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. உடல் அழுகிய நிலையில், துணியால் மூடப்பட்ட ஒரு பெண்ணின் சடலமும் தரையில் கிடந்தது.
தொடர்ந்து தேடியபோது, கற்களால் அடுக்கியிருந்த இரண்டு சிறு குழிகள். அவற்றைத் தோண்டியபோது, உள்ளே இரண்டு சிறுமிகளின் சடலங்கள் – அழுகி, அங்கம் சிதைந்த நிலையில் கிடந்தன.
இறுதியில், நான்கு சடலங்களும் மீட்கப்பட்டன. உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. சம்பவ இடத்தில் போலீஸார் தேடியபோது, மது பாட்டில்கள், மருந்து சீட்டுகள், சிம் இல்லாத செல்போன், சார்ஜர், செருப்புகள் போன்றவை கிடைத்தன.
அந்த மருந்து சீட்டு, தஞ்சாவூரில் உள்ள தனியார் மனநல மருத்துவமனையை கை காட்டியது. தஞ்சாவூர் போலீஸுடன் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அனைவரும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிந்தது.
ஜெயமாலா, அவள் குழந்தைகள் மற்றும் பெரியம்மா மகன் கலைச்செல்வன். வெங்கடேசனை அழைத்து வந்து, சடலங்களை அடையாளம் காட்டினர். "அவங்கள்தான்," என்று அவன் உறுதிப்படுத்தினார்.
வெங்கடேசன்குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பணம் சேர்த்தார்.. இப்போது.. அந்த பணமும் போய்விட்டது.. குழந்தைகளும் போய் விட்டனர்.. வெங்கடேசனின் அனுமதியின்றி அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
ஆனால், மர்மங்கள் அதிகரித்தன. ஜெயமாலாவும் கலைச்செல்வனும் முகத்தில் துணியைப் போட்டு, டேப் போட்டு ஒட்டிய நிலையில் இருந்தனர். குழந்தைகள் குழியில் புதைக்கப்பட்டனர்.
இது தற்கொலையா? அல்லது கொலையா? வட்டித் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் ஏற்பட்ட முன்விரோதமா? யாராவது கடத்தி கொன்றார்களா? அல்லது அண்ணன்-தங்கை உறவில் இருந்த இருவரும் தகாத உறவில் சிக்கி, குழந்தைகளைப் பலி செய்து, அவர்களாகவே தங்களுடைய வாழ்க்கையை முடித்துக்கொண்டார்களா?
இரண்டு மாதங்கள் கழித்து, திருப்பதி காட்டில் இப்படி சடலமாக மீட்கப்படுவது எப்படி? அவர்கள் ஏன் அங்கு சென்றனர்..? பாலோவ் செய்யப்பட்டார்களா..? ஏதாவது காரணத்திற்க்காக தப்பி ஓடினார்களா? பாகலா போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். உடற்கூறு அறிக்கை காத்திருக்கிறது. ஆந்திர-தமிழ்நாடு போலீஸ் ஒன்றிணைந்து விசாரிக்கின்றனர்.
வெங்கடேசன், தன் குடும்பத்தை இழந்து, கிராமத்தில் தனியாகத் தவிக்கிறான். காட்டின் இருண்ட நிழலில் மறைந்திருக்கும் உண்மை, போலீசார் வசம் கிடைத்துள்ள ஆதாரங்கள் அனைத்தும் விரைவில் வெளியேறும்.
ஆனால், இந்தக் கதை, பணத்தின் பேரழிவையும், உறவுகளின் இருண்ட முகத்தையும் நினைவூட்டுகிறது. திருப்பதி காடு, தன் ரகசியங்களை மெதுவாக வெளிப்படுத்தும் வரை, இந்த மர்மம் தொடரும்.
இந்த வழக்கு விசாரனையின் முடிவுகள் வந்ததும் உடனே தெரிந்து கொள்ள நம்முடைய கிரைம் தமிழகம் டெலிகிராம் சேனலை ஃபாலோவ் செய்து கொள்ளுங்கள்.
Summary : Four bodies, including Jayamala, her two daughters, and cousin Kalaichelvan, were found dead in Tirupati's Mulavanka forest. Jayamala, who lost money in a failed investment, vanished with her children two months ago. Police suspect murder or suicide, investigating financial disputes and illicit relations.


